ஜெர்மனி நாட்டில், ஸ்குலோஸ் எல்மாவ் என்ற இடத்தில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள ‘ஜி-7’ அமைப்பின் உச்சி மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் நேரில் கலந்துகொள்ளுமாறு, பிரதமர் மோடியை ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் அழைத்துள்ளார்.
ஜி7 மாநாடு மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடிக்கு, அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜெர்மனியில் ஜூ7 நாடுகளின் மாநாடு துவங்குகிறது. அதில், அந்நாட்டு அதிபரின் அழைப்பின் பேரில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனியின் முனிச் நகருக்கு சென்றடைந்தார். விமான நிலையத்தில் இசைக்கலைஞர் வாத்தியங்களை இசைத்து மோடிக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அங்கு குவிந்த இந்திய வம்சாவளியினர் தேசியக்கொடியை காண்பித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.
அவர்கள் அருகில் சென்று கையை உயர்த்தி அசைத்து வரவேற்பை ஏற்று கொண்ட மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.தொடர்ந்து ஓய்வெடுக்க ஓட்டலுக்கு மோடி சென்றார். அங்கும் குவிந்திருந்த இந்தியர்கள், அவரை வரவேற்பு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அங்கிருந்த குழந்தைகளுடன் மோடி பேசினார்.
இந்த மாநாட்டின் இடையே அவர் 12 நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து பேச உள்ளார். உச்சி மாநாட்டை முடித்துக்கொண்டு அவர் நாளைமறுதினம் (28-ந்தேதி) ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.