021-22 -ம் ஆண்டில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) நடத்திய காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பின்படி, அகில இந்திய தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தின் மதிப்பீடுகள் – மக்கள் தொகையில் தொழிலாளர் சக்தியில் உள்ள நபர்களின் சதவீதமாக வரையறுக்கப்படுகிறது. 2022-23 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டுகளில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் தொழிலாளிகளாகச் சேர்வது படிப்படியாக அதிகரிப்பதைக் காட்டுகின்றன.
2014-15-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட கல்வி பயிலுங்கள் மற்றும் வருவாய் ஈட்டுங்கள் (சீகோ அவுர் கமாவோ) திட்டம், சிறுபான்மை இளைஞர்களின் (14-45 வயது) கல்வித் தகுதி, நிலவும் பொருளாதார போக்குகள் மற்றும் சந்தை வாய்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து பல்வேறு நவீன / பாரம்பரிய திறன்களில் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். இத்திட்டத்தின் கீழ், 2.69 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி பெற்றனர். இது மொத்த பயனாளிகளில் 57.64% ஆகும்.
உஸ்தாத் திட்டம் 2015-ல் தொடங்கப்பட்டது. முதன்மை கைவினைஞர்கள் / கைவினைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் பாரம்பரிய திறன்களை மேம்படுத்துவதை இத்திட்டம் இலக்காகக் கொண்டது. இத்திட்டத்தின் கீழ், 19,255 பெண்கள் பயிற்சி பெற்றனர், இது மொத்த பயனாளிகளில் 89.10% ஆகும்.
முறையான பள்ளி மாற்றுச் சான்றிதழ் இல்லாத சிறுபான்மையின இளைஞர்கள் பயனடையும் நோக்கத்துடன் நயி மன்சில் திட்டம் 2014-15 முதல் 2020-21 வரை செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் முறையான கல்வி (எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு) மற்றும் திறன்களின் கலவையை வழங்கியது மற்றும் பயனாளிகளுக்கு சிறந்த வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தைத் தேட உதவியது. இத்திட்டத்தின் கீழ், 54,233 பெண்கள் பயிற்சி பெற்றனர், இது மொத்த பயனாளிகளில் 54.94% ஆகும்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சிறுபான்மையினர் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு இந்தத் தகவலைத் தெரிவித்தார்.