பாராளுமன்ற தேர்தல் எனும் ஜனநாயக திருவிழா நாடுமுழுவதும் கொண்டாடுவதற்கு தாயராகி வருகிறது. ஜனநாயக திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுவதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. தேர்தல் களத்தில் ஜெட் வேகத்தில் பறக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. 267 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளது.
ஆளும் பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி தொடர் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார். கட்சி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டங்களிலும் கலந்துகொண்டு பம்பராமாய் சுழன்று வருகிறார். கடந்த முறையை விட இந்த முறை அதிக தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளது.வட மாவட்டத்தில் அதிக வாக்கு வங்கி பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியை தற்போது பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இணைந்துள்ளது அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாரதிய ஜனதா கட்சியுடன் இனிமேல் கூட்டணி இல்லை என அறிவித்த நிலையில் மற்ற கட்சிகள் தங்களுடன் கூட்டணி அமைப்பார்கள் என கதவுகளைத் திறந்து காத்திருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு பாஜக தலைமை அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.இன்னும் ஒரு சில தினங்களில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் அதன் பொதுச்செயலாளர் பிரேமலதாவும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிந்துள்ளது.இதனால் பெரும் அதிர்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி உள்ளார்.
அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகளையே தமாக ,பாமக,தேமுதிக மறுபடியும் கூட்டணிக்குள் கொண்டுவர முடியவில்லை நேற்று கட்சி ஆரம்பித்த மன்சூரலிகானிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதுஅதிமுக. தேமுதிக சரியான பதில் இல்லை, தமிழகத்தில் 30 வருடம் ஆண்ட கட்சி அதிமுக அதன் கதையை அரசியலுக்கு வந்த 3 வருடத்திலேயே அண்ணாமலை அவர்கள் முடித்து விட்டார் என்கிறர்கள் அரசியல் நோக்கர்கள்.
மேலும் தமிழகத்தில் திமுக அதிமுகவை தவிர வேறு கட்சி மாற்றுக் கட்சி இல்லை என கூறப்பட்டு வந்த நிலையில் தேர்தல் முந்தைய கருத்து கணிப்புகளில் அ.திமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக இரண்டாமிடம் பிடித்துள்ளது. மேலும் தமிழகத்தில் மோடியின் எதிர்ப்பு தாக்கம் தற்போது அறவே இல்லை. தமிழக பாஜக வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்த வேகத்தை அதிகமாக்கியுள்ளார் அண்ணாமலை. இதன் காரணமாக தமிழகத்தில் பா.ஜ.க அதிக அளவில் வாக்கு சதவீதம் பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.