அயோத்தியா மண்ணில் ராமபிரானுக்கு கோயில் கட்டுவற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த நிலையில் அயோத்யா வழக்கு கடந்து வந்த பாதை சற்று பார்ப்போம் !
1.ஸ்வாமி மஹந்த் ரகுபர் தாஸ் ( 1885 ம் ஆண்டு முதன்முதலில் ராமஜென்மபூமியில் உரிமை கோரி வழக்குத்தொடுத்தவர் ( வழக்கு எண் : 61/280 )
2.திரு.கே.கே.கே. நாயர் (மாவட்ட நீதிபதி – பைசலாபாத் – 1949 )
- குருதத் சிங் ( உள்ளூர் அதிகாரி – அயோத்தி – 1949 )
- கோபால் சிங் விஷாரத் ( 1950 ஹிந்து மஹா சபை உறுப்பினர் – சுதந்திரத்திற்குப்பின் முதன்முதலாக வழக்குத்தொடுத்தவர் )
- ஸ்வாமி ப்ராமஹன்ஸ் ராமச்சந்திர தாஸ் ( இரண்டாம் வழக்கு – 1950 )
- நிர்மோஹி அகாடா அமைப்பினர் ( 1959ல் வழக்கில் தம்மை இணைத்துக்கொண்டவர்கள் )
- திரு.உமேஷ் சந்திர பாண்டே – வழக்கறிஞர் – 1986ல் பூட்டப்பட்டிருந்த பாப்ரி கும்மட்ட கதவுகளை நீக்கி , உள்ளே இருந்த ராமர் விக்கிரகத்தை தரிசிக்க அனுமதி கோரி மனுப்போட்டவர்..இவர் மனுவின் மீது தான் அனுமதி வழங்கப்பட்டது…)
8.திரு. தியோகி நந்தன் அகர்வால் – முன்னாள் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி – ராமர் குழந்தை என்பதால் தான் அவரின் உறவினராக ஆஜராவதாகவும் , மொத்த ராமஜென்மபூமியையும் ஹிந்துக்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கோரி வழக்கில் தம்மை ஐந்தாவது மனுதாரராக இணைத்துக்கொண்டவர் ) - சர்சங்க சாலக் . பாளா சாகிப் தேவரஸ் ஜி…ராமஜென்மபூமி விவகாரத்தை கையிலெடுக்கும்படி பாஜகவினரை அறிவுறுத்தியவர்.
- திரு. அஷோக் சிங்கல்.( வி.ஹெச்.பி தலைவர்…இராமஜென்மபூமிக்காக நிஜமாகவே ரத்தம் சிந்தியவர்..)
- திரு. லால் கிஷன் அத்வானி ஜி..(இராமஜென்மபூமி விவகாரத்தை தேசத்தின் கடைக்கோடி வரை சென்று சேர்த்தவர் .. இவர் இல்லையேல் இன்று இந்த வெற்றி சாத்தியமில்லை..)
- திரு.முரளி மனோகர் ஜோஷி.
- சாத்வி.உமாபாரதி
- சாத்வி.ரிதம்பரா தீதி.
- திரு.கல்யாண் சிங் ( அன்றைய உ.பி.முதலமைச்சர் – பாப்ரி கும்மட்டத்தை அகற்ற தன் பதவியை தத்தம் செய்தவர் )
- திரு. பி.வி. நரசிம்ம ராவ் ( அவர் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும்…)
- காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு. ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ..( இராமர் கோயில் கட்ட தன்னால் இயன்றவரை பாடுபட்ட ஒரே மடாதிபதி )
- திரு.கே.கே .முஹம்மது ( அயோத்தியில் அகழாய்வு மேற்கொண்டு , அங்கு கோயில் இருந்ததை உறுதிப்படுத்திய தொல்லியல் ஆய்வுத்துறை அதிகாரி )
- பண்டிட்.ஸ்ரீ.ஸ்ரீ.ரவிசங்கர் ஜி…( வாழும் கலை நிறுவனர்.- உச்சநீதிமன்றம் அமைத்த சமாதானக்குழுவின் ஹிந்து பிரதிநிதி.)
- அட்வகேட் . பராசரன் அவர்கள்.
21 . திரு.ரஞ்சன் கோகோய் ( உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி )
பாரதப்பிரமர் திரு.நரேந்திர தாமோதர்தாஸ் மோடி….
இவரது தொடர்ந்த தேர்தல் வெற்றிகள்தான் பல நூற்றாண்டுகளுக்குப்பிறகு ஹிந்துக்களுக்கு நியாயம் கிடைக்க அடிப்படைக்காரணம்..இன்னும் பாப்ரி கும்மட்டத்தில் காவிக்கொடியேற்றி , முல்லா முலாயமால் சுட்டுக்கொல்லப்பட்ட இரட்டைச் சகோதரர்கள் , அதே கொலைகாரப்பாவியால் அன்று சரயூ நதியில் கொன்று வீசப்பட்ட எண்ணற்ற கரசேவகர்கள் , கோத்ரா ரயில் எரிப்பில் உயிரிழந்த ராம பக்தர்கள் , இன்னும் இந்த மாபெரும் காரியத்துக்காக பல நூற்றாண்டுகளாக தங்கள் இன்னுயிரை ஈந்த அனைத்துப்பெருமக்களின் திருப்பாதங்களை வணங்கிப்பணிகிறோம்…
ராமர் கோயில் பணிகளில் மோடி தவறாமல் பங்கேற்பார். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி 1990-ல் குஜராத்தில் இருந்து அயோத்திக்கு நடத்திய ரத யாத்திரையில் முக்கிய பங்கு வகித்தார்.
1991-ல் பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் ஒற்றுமை யாத்திரையின் போது அயோத்திக்கு உடன் சென்றார். அங்கு நிருபர்களிடம் மோடியை காட்டி இவர் தான் குஜராத் பா.ஜ. தலைவர் என ஜோஷி அறிமுகம் செய்து வைத்தார். மோடியிடம் நிருபர்கள் அடுத்த முறை அயோத்திக்கு எப்போது வருவீர்கள் எனக்கேட்டனர். அதற்கு அவர் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருவேன் என்றார். இன்று அவர் அடிக்கல் நாட்டுகிறார்.