தமிழகத்தில் மாதம் குறைந்தபட்சம் ஒருவராவது காவல்துறையினரின் அடக்குமுறை காரணமாக உயிரிழந்து வருகிறார்கள். மற்றொரு புறம் ரவுடிகள் ராஜ்ஜியம் என தமிழகம் சட்டம் ஒழுங்கில் சற்று தடுமாறித்தான் வருகிறது. ஒருபுறம் காவல்துறையினர் வெட்டி கொலை,என்ற செய்தியும் வருகின்றது.
தினசரி நடக்கும் குற்ற செயல்களும் கூடி கொண்டே தான் வருகிறது. அதேபோல் காவல்துறையினர் , விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவர்களிடம் அவர்கள் காட்டும் அணுகுமுறை, சித்ரவதை என்ற குற்ற செயல்களும் அதிகரித்து வருகிறது. அதுவும் இந்த 8 மாதத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் காவல்துறை மீது எழுந்துள்ளது.
இப்போது லேட்டஸ்ட்டாக சர்ச்சையில் சிக்கி இருப்பது சென்னையில் கொடுங்கையூர் போலீசார்… சட்ட கல்லூரி மாணவரை ஸ்டேஷன் அழைத்து சென்று அடித்து உதைத்து, முகத்தில் சிறுநீர் கழித்து சித்ரவதை செய்துள்ளனர் என்பது புகாராகும்.
வியாசர்பாடியை சேர்ந்த அப்துல் ரஹீம். தரமணியில் உள்ள சட்ட பல்கலைக்கழகத்தின் 5ம் ஆண்டு சட்டமாணவர். பட்டப்படிப்புடன் பார்ட் டைம் வேலையும் பார்த்து வருகிறார். நேற்றிரவு பணி முடிந்து அவர் வீடு சென்று கொண்டிருந்ததார்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். மாஸ்க் போட்டு இருந்தும், அதை அணியவில்லை என்று கூறி அபராதம் கட்டுமாறு வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் ரஹீம் அதற்கு மறுத்துவிடவே, வாக்குவாதம் முற்றி இருக்கிறது.
ஒரு கட்டத்தில் போலீசாரை அடிக்க ரஹீம் முயன்றுள்ளார். இதனை தொடர்ந்து ரஹீமை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்ற காவலர்கள் நைய புடைத்துள்ளதாக தெரிகிறது. மேலும் என்று ஆடைகளை களைந்து அவர் முகத்தில் சிறுநீர் கழித்து சித்ரவதை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
போலீசார் தாக்குதல் மற்றும் சித்ரவதையில் கண்ணில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளதாகவும் ரஹீம் தெரிவித்துள்ளார். ராத்திரி 1 மணி முதல் காலை 11 மணி வரை கிட்டத்தட்ட 10 மணி நேரம் அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளனர் என்று அவர் கூறி உள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















