காவல் துறையினர் மீது தாக்குதல் இந்துமுன்னணி கண்டனம்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலாக பரவிவரும் சூழ்நிலையில் இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.

அதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியா முழுவதும் கடந்த 1 மாத காலம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மே 3 வரை நடைமுறையில் இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இந்த ஊரடங்கினை காவல்துறையினர் கடுமையாக அமல் படுத்தி வருகின்றனர் ஒரு சில பகுதிகளில் வெளியே செல்லும் பொதுமக்களிடம் அறிவுரைகள் கூறியும் வழக்குகள் பதிவு செய்தும் சமூக பரவலை தடுத்து வருகின்றனர்.


அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் இரவு பகல் பாராமல் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை முஞ்சிறை ஒன்றியம் முள்ளூர் துறை பகுதிகள் இளைஞர்கள் குழுவாக இணைந்து கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அந்தப் பகுதிக்கு ரோந்து சென்ற காவல்துறையினர் அவர்களை அழைத்து அறிவுரை கூறி அந்தப் பகுதியிலிருந்து கலைத்து அனுப்பிவைத்தனர்.

ஆனால் மீண்டும் மாலை காவல்துறையினர் அந்தப் பகுதிக்கு ரோந்து சென்றபோது அதே இளைஞர்கள் அங்கே விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து மீண்டும் அவர்களை அழைத்து கண்டித்துள்ளார்.

அப்போது அங்கிருந்த இளைஞர்கள் தேவாலயத்தில் கூட்டு மணி அடித்து ஊர் பொதுமக்கள் அனைவரும் இணைந்து காவல்துறையினரை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும்காவல்துறையினர் வந்த வாகனங்கள் மீதும் கல்லெறிந்து இரண்டு வாகனங்களையும் முழுவதாக சேதப்படுத்தினர்.

அந்தத் தாக்குதலில் புதுக்கடை உதவி ஆய்வாளர் இளங்கோ அவர்களும் மற்றுமொரு காவலரும் படுகாயம் அடைந்து குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலைக் இந்து முன்னணி பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் இந்துமுன்னணி வலியுறுத்துகிறது.

மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு அந்தப் பகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜேஷ் குமார் அவர்கள் வந்து பார்வையிட்டு நடந்ததை விசாரித்து சென்றுள்ளார்.

ஆனால் தற்போது வரை காவல்துறையினர்மீது நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலுக்கு எந்த ஒரு கண்டனமும் தெரிவிக்கவில்லை.

தாக்குதல் நடத்தியவர்கள் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஓட்டுக்காக நம் நாட்டைக் காக்கும் காவல்துறையினர் தாக்கப்பட்டாலும் அதை கண்டும் காணாமல் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் அவர்களையும் இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.


த.அரசுராஜா
மாநில பொதுச்செயலாளர்
இந்து முன்னணி

Exit mobile version