நேற்று முன் தினம் இரவு (10/03/2020) சுமார் 10.30 மணியளவில் சையது இக்பால் என்பவர், D- 1, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தன் நண்பர் பைசூதின் என்பவரை சென்னை மவுண்ட் ரோடு புகாரி ஓட்டல் அருகில் இருந்து ஒரு சிலர் காரில் கடத்தி சென்று விட்டதாக புகார் அளிக்கிறார்.
இதையடுத்து , கிடைத்த தகவலின் அடிப்படையில் ராயப்பேட்டை மணிக்கூண்டருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த காரை வழிமறித்து திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் மோகன்தாஸ் சோதனையிடும் போது, காருக்குள் இருந்தவர்கள் அவரை நடு சாலையில் கடுமையாக தாக்கினர்.
கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்ட போதும் பொது மக்கள் யாரும் இந்த தாக்குதலை தடுக்க முயற்சிக்கவில்லை என்பது சோகம். (இது குறித்த முதல் தகவல் அறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது).
கடுமையான தாக்குதலுக்கு உட்பட்ட ஆய்வாளரை அரைமணி நேரத்திற்கு பிறகு சில காவல்துறையினர் சென்று ஆய்வாளரை மீட்டு,ராஜா உசேன் என்ற நபர் உட்பட ஐந்து நபர்களை கைது செய்தனர்.
இந்த ராஜா உசேன் என்பவன் தான் 1994 ஹிந்து முன்னணி அலுவலக குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தடை செய்யப்பட்ட அல்-உம்மா இயக்கத்தை சார்ந்தவன்.
தற்போது இந்திய தேசிய லீக் என்ற கட்சியின் நிர்வாகிகளில் ஒருவன்.
இந்த நபர்களால் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி, அவர்களுடன் நடு தெருவில் போராடி கைது செய்து விசாரித்த ஆய்வாளர் மோகன்தாஸ் தற்போது அந்த காவல் நிலைய பணியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார்.
இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால், அவர் இந்த சம்பவம் நடைபெற்ற நாளுக்கு முந்தைய தினமே மாற்றப்பட்டதாக சொல்லப்படுவது தான் (ஆவணம் இணைக்கப்பட்டுள்ளது)
10/03/2020 அன்று நடைபெற்ற சம்பவத்தில் தாக்கப்பட்டு, கடத்தல் காரர்களை கைது செய்த ஆய்வாளர், காவல் துறை தலைவரின் உத்தரவு படி 09/03/2020 தேதியிட்டு கடிதம் மூலம் பணியிட மாற்றம் செய்யப்பட்டது எப்படி?
மேலும், நிர்வாக ரீதியிலான மாற்றம் என்று சொல்லும் அதே உத்தரவில் அவரை ‘பதற்றம் இல்லாத ‘ (Non-Sensitive Post) பணியிடம் ஒதுக்குமாறு உத்தரவிட்டது ஏன்?காவல்துறை ஆய்வாளருக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதாலா?
அப்படியென்றால் காவல் துறையினருக்கே பாதுகாப்பில்லாத சூழ்நிலை தமிழகத்தில் உள்ளதா? அல்லது ராஜா உசேன் உள்ளிட்டோரை கைது செய்தது தவறு என்ற அழுத்தத்தின் காரணமாக ஆய்வாளருக்கு பணியிட மாற்றமா?
நட்ட நடு சாலையில் துணிச்சலோடு செயல்பட அந்த காவல் ஆய்வாளரை பாராட்டும் அதே வேளையில்,தமிழகத்தில் இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனவா?
அரசியல் நிர்பந்தத்திற்கு பணிந்ததா காவல் துறை?
இது தமிழகத்திற்கு நல்லதல்ல என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடிகிறது.
பதிவு :- பாஜக மாநில நிர்வாகி நாராயணன் திருப்பதி.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















