பாண்டிச்சேரியில் அடுத்து பிஜேபி முதல்வர் மோடி-அமித்ஷா அதிரடி திட்டம்.

தமிழகத்தில் இடி இடித்தால் பாண்டிச்
சேரியில் மழை பெய்யும் என்பார்கள்.
அதாவது தமிழக அரசியலில் ஏற்படும் நிகழ்வுகள் பாண்டிச்சேரியில் எதிரொலிக்கும்.

ஆனால் இப்பொழுது பாண்டிச்சேரி
யில் இடி இடிக்க ஆரம்பித்து இருக்கிறது.

அதாவது திமுக காங்கிரஸ் கூட்டணியில் பாண்டிச்சேரியில் இப்பொழுது இடிவிழ ஆரம்பித்து இருக்கிறது. இதன் விளைவு தமிழகத்தில் உள்ள திமுக காங்கிரஸ் கூட்டணியிலும் எதிரொலிக்கும்.

திமுக காங்கிரஸ் கூட்டணி முறிவடைந்தால் பாண்டிச்சேரியில் அதன் முழு பலனை அனுபவிக்கஇருப்பது பிஜேபி தான்.


பாண்டிச்சேரியில் இப்போதைய காங்கி ரஸ் எம்எல்ஏக்களில் சிலர் அதாவது 5 க்கும் மேற்பட்டோர் காங்கிரசில் இருந்து
விலகி பிஜேபி யில் இணைந்து பிஜேபி சார்பாக தேர்தலில் போட்டியிட இருக்கி றார்கள்..

அதனால் எப்படியும் பிஜேபி இந்த முறை பாண்டிச்சேரியில் ஒரு சில எம்எல்ஏக்க ளைபெற்று விடும். இதற்கு திமுக காங்கி ரஸ்கூட்டணி முறிவு தான் துணை நிற்கு ம்.

பிஜேபி பாண்டிச்சேரி சட்டமன்றத்திற்குள் நுழைந்து விட்டாலே போதும்.

காங்கிரஸ் கதை முடிந்து விடும். காங்கிரஸ் எம்எ ல்ஏக்களை வளைத்து அதிமுக மற்றும் சிறிய கட்சிகளின் துணையுடன் ஆட்சி அமைக்க முடியும்.

வழக்கமாக தமிழகத்தில் வெற்றி பெறும் கூட்டணி தான் பாண்டிச்சேரியிலும் ஆட்சி அமைக்கும்.

கடந்த தேர்தலில் ஜெயலலிதா நினைத்து இருந்தால் பாண்டி ச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் தலைமையில் அதிமுக கூட்டணி அரசை கொண்டு வந்து இருக்க முடியும்.

ஜெயலலிதா ஓவராக ஆசைப்பட்டதால் என்ஆர் காங்கிரஸ் அதிமுக கூட்டணிக்கு வழி இல்லாமல் போய் விட்டது .ஆனால் இந்த முறை நிச்சயமாக பிஜேபி அதிமுக என்ஆர் காங்கிரஸ் கூட்டணி தான் ஆட்சி யை பிடிக்கும்.

பிஜேபி தலைமையில் அந்த கூட்டணி அரசு அமையவே நிறைய வாய்ப்புகள் இருக்கிறது அதாவது பாண்டிச்சேரியில் பிஜேபி முதல்வர் தமிழகத்தில் பிஜேபி கூட்டணியின் சார்பாக அனேகமாக ஓபி எஸ் தான் முதல்வராக வாய்ப்புகள் இருக்கிறது.

பாண்டிச்சேரியில் தேர்தலுக்கு பிறகு என்ஆர் காங்கிரஸ் பிஜேபி யுடன் இணையலாம்.ரெங்கசாமி பிஜேபி சார்பாக முதல் வராக வாய்ப்புகள் இருக்கிறது

Exit mobile version