பேனரில் பெயர் இல்லை அதிகாரிகளை மிரட்டிய பூந்தமல்லி தி.மு.க எம்.எல்.ஏ வைரலானா வீடியோ!

முதல்வர் ஸ்டாலின் விளம்பரம் தேடாத தலைவர் என தி.மு.கவினர் விளம்பரம் செய்து வரும் நேரத்தில் திமுக எம்.எல் ஏக்கள் பேனரில் படம் இல்லை என அதிகாரிகளை மிரட்டி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லியில் கொரோனா ஆய்வுப் பணியினை மேற்கொண்ட திமுக எம்.எல்.ஏ பேனரில் அவரின் பெ யர் இடம் பெறாததால் கோபம் அடைந்து அங்கிருந்த அதிகாரியை மிரட்டிய சம்பவம் அரேங்கேறியுள்ளது. பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட நசரத்பேட்டையில் உள்ள தனியார் சித்த மருத்துவ கல்லூரியில் 74 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையத்தை அமைச்சர் நாசர், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் திறந்து வைக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Sivangi HEALTH CONDITION | Ashwin

நிகழ்ச்சிக்கு முன்னதாக அங்கு வந்த பூந்தமல்லி திமுக எம்எல்ஏ கிருஷ்ணசாமி, அங்கிருந்த பேனரில் தனது பெயர் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் கட்டுப்படைந்த சட்டமன்ற உறுப்பினர் பேனரில் தனது பெயர் இல்லாதது குறித்து அதிகாரிகளை அழைத்து கிருஷ்ணசாமி மிரட்டியுள்ளார். இதையடுத்து, அதிகாரிகள் திமுக எம்எல்ஏவிடம் மன்னிப்பு கேட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

பேனரில் பெயர் இல்லாததால் கடுப்பான பூந்தமல்லி திமுக எம்எல்ஏ
FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version