இந்தியாவின் புதிய சமூக வலைதள தொழில் நுட்ப சட்டங்களை ட்விட்டர் நிறுவனம் ஏற்காததால் மத்திய அரசுக்கும், ட்விட்டர் நிறுவனத்துக்கும் இடையே பெரும் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது இந்த நிலையில் இந்தியாவில் ட்விட்டர் பறக்க ஆசை இல்லை போல தெரிகிறது. வழக்கு மேல் வழக்குகளாக சந்தித்து வருகிறது ட்விட்டர் நிறுவனம். எப்போது இந்தியாவில் முடக்கப்படும் என்பது தெரியவில்லை. ட்விட்டர் நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா கடிதம் அளித்து வருகிறார்கள். மேலும் அதன் பங்குச்சந்தை 25% சரிவை நோக்கி சென்றுள்ளது.
ட்விட்டர் இந்தியாவின் தலைமை நிர்வாகியான மனீஷ் மஹேஷ்வரி மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி செய்தி வெளியிட்டு மத கலவரத்தை தூண்ட முயற்சித்த விவகாரத்தில் முன் ஜாமீன் வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ட்விட்டர் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்துள்ளது. இது அந்த நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
சமீபகாலமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முக்கிய சமூக வலைத்தளமாக விளங்கும் ட்விட்டரில் குழந்தைகளின் ஆபாசப் படங்களின் பதிவு இருப்பதால் தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் சார்பில் ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் ட்விட்டர் இந்தியா மீது போஸ்கோ சட்டம் பாய்ந்துள்ளது .
மேலும் ட்விட்டர் பக்கத்திலிருந்து ஆபாசப் படங்களை ஒரு வாரத்துக்குள் நீக்குமாறு அந்நிறுவனத்தின் இந்திய மேலாண்மை இயக்குநருக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட ஆபாசப் படங்கள் ட்விட்டரில் கிடைப்பது என்பது இந்திய சட்டங்களை மீறுவதோடு, அந்த நிறுவனத்தின் சொந்தக் கொள்கைக்கும் முரணானது என்று தெரிந்திருந்தும் அப்படங்களை நீக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை அறிந்து மகளிர் ஆணையம் வேதனையடைகிறது.
ஆபாசப் படங்களைப் பதிவு செய்திருக்கும் சில கணக்கு விவரங்களை ட்விட்டர் நிறுவனத்திடம் வழங்கியுள்ளதோடு ஒரு வாரத்துக்குள் அவற்றை நீக்குமாறு உத்தரவிட்டுள்ளோம். இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து 10 தினங்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறினால் சட்டம் தன் கடமையை செய்யும்!
இந்நிலையில், ட்விட்டர் தரப்பில் ஒரு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது ட்விட்டர் நிறுவனம் என்றும், மேலும் குழந்தைகளின் ஆபாச படங்களை ட்விட்டரில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.