சின்னம் மாறி போட்டி தப்புமா தமிழக 4 எம்.பிகளின் பதவி! பிப்ரவரி மாதத்தில் இடைத்தேர்தல் நடக்குமா?

oredesam,

oredesam,

சின்னம்‌ மாறி போட்டியிட்ட விவகாரத்தில்‌ 4 எம்‌.பி.க்களின்‌ தலைக்கு மேல்‌ கத்தி தொங்கிக்‌ கொண்டிருக்கிறது என்பதுதான்‌ தமிழக அரசியலில்‌ லேட்டஸ்ட்‌ ஹாட்‌ டாபிக்‌! இது தொடர்பாக தேசிய மக்கள்‌ சக்தி கட்சித்‌ தலைவரான வழக்கறிஞர்‌ எம்‌.எல்‌.ரவி.2019ம்‌ ஆண்டு சென்னை உயர்‌ நீதிமன்றத்தில்‌ தாக்கல்‌ செய்திருந்த பொதுநல வழக்கினை தொடர்ந்தார்.,

அந்த மனுவில் 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியில் உங்கள் நாடு மக்கள் தேசிய கட்சியின் என்றால் நாமக்கல் தொகுதியில் அதிமுகவின் கணேசமூர்த்தி ஈரோடு தொகுதியிலும் இந்திய ஜனநாயக கட்சியின் டி ஆர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியிலும் போட்டி யிட்டனர்

ஆனால் மேற்படி நான்கு பேரும் தங்களது கட்சி சின்னத்தில் போட்டியிடாமல் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியுள்ளனர். ஒரு கட்சியில் இருந்து கொண்டு அக்கட்சியில் இருந்து விலகாமல் மற்றொரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதம்.

அதுமட்டுமல்லாமல் தவிர ஒரு கட்சியில் பொறுப்பு வைத்துக் கொண்டு மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிடுவதற்கு சட்டத்தில் இடம் இல்லை. எனவே திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் இதே போல திமுக கூட்டணி கட்சியினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் செல்லாது என அறிவிக்க வேண்டும்.

மேலும் இந்த வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டது தவறு இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மேற்படி நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் தேர்தல் வெற்றி செல்லாது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு தற்போது வேகம் எடுத்து வரும் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் ரவிக்குமார் நான் திமுக உறுப்பினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவன் என்று அனுமானத்தின் பேரில் மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார் மக்களவைத் தேர்தலில் வேட்பு மனு தாக்கலின் போது திமுக உறுப்பினர் என்ற அடிப்படையில்தான் படிவம் பூர்த்தி செய்து கொடுத்துள்ளேன்

நான் திமுகக்காரன் என்பதற்கு ஆதாரமாக கட்சியின் உறுப்பினர் பட்டியலில் எனது பெயர் இருக்கிறது அதற்கான அடையாள அட்டையும் என்னிடம் இருக்கிறது மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு மட்டுமே தொடர முடியும்,ஆனால் இந்த மனுதாரர் விளம்பர நோக்கில் பொதுநல வழக்காக தொடர்ந்திருக்கிறார் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகுமார்

இதுபோல மதிமுகவை சேர்ந்த கணேசன் என்றும் தன்னை திமுக உறுப்பினர் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார் இதுதான் தற்போது பெரும்பிரச்சனையை கிளப்பியிருக்கிறது இதுகுறித்த வழக்கு கொடுத்த வழக்கறிஞரிடம் விசாரித்தபோது தேசிய மக்கள் சக்தி கட்சி பல ஆண்டாக நடத்தி வருகிறேன்.

24 சட்டமன்ற தொகுதிகளில் உங்களது கட்சி போட்டியிட்டுள்ளது. அதே சமயம் சமூக நோக்கோடு வழக்கறிஞர் தொழிலையும் செய்து வருகிறேன் இந்த வழக்கின் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் விசிக ரவிக்குமார் தன்னை திமுக உறுப்பினர் என்கிறார்.

அப்படியென்றால்‌ 2006 சட்டமன்றத்‌ தேர்தலில்‌ காட்டுமன்னார்கோவில்‌ தொகுதியில்‌ நின்று வெற்றி பெற்றபோது. எந்தக்‌ கட்சியில்‌ இருந்தார்‌.தவிர, வி.சி.க.வின்‌ ஆண்டு அறிக்கைகள்‌, மாவட்ட, மாநில கட்சிக கூட்டங்கள்‌, தேர்தல்‌ ஆணையத்திற்கு அனுப்பிய ஆவணங்களில்‌ பொதுச்செயலாளர்‌ என்று ரவிக்குமார்‌ கையெழுத்துபோட்டதில்லையா? என்கிற கேள்வி எழுகிறது.

இதேபோலதான்‌, ம.தி.மு.க.வில்‌ மாவட்டச்‌ செயலாளராக இருக்கும்‌ கணேசமூர்த்தியும்‌, கொங்குநாடு மக்கள்‌ தேசியக்‌ கட்சியின்‌ சின்ராஜும்‌. இதில்‌ ஹைலைட்‌ என்னவென்றால்‌, ஐ.ஜே.கே. என்ற கட்சியின்‌ தலைவராக இருப்பவர்‌ பாரிவேந்தர்‌. அவரே உதயசூரியன்‌ சின்னத்தில்தான்‌ போட்டியிட்டிருக்கிறார்‌.

ஆனால்‌, அவர்‌ இதுவரைஎந்தவித பதில்‌ மனுவும்‌ தாக்கல்‌ செய்யவில்லை.அவர்‌ என்ன பொய்‌ சொல்லப்‌ போகிறாரோ தெரியவில்லை.

கணேசமூர்த்தி இதைவிட கொடுமை என்னவென்தால்‌, தி.மு.க. அளித்த பார்ம்‌ :பி’ உறுதிமொழியில்‌ ரவிக்குமார்‌, பாரிவேந்தர்‌, கணேசமூர்த்தி. சின்ராஜ்‌ ஆகிய 4 பேரும்‌ வேறு எந்தக்‌ கட்சியிலும்‌ உறுப்பினராகக்கூட இல்லை என்று தேர்தல்‌ஆணையத்தில்‌ உறுதிமொழிப்‌ பத்திரம்‌ கொடுத்திருக்கிறார்கள்‌.

இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்‌. இது சட்ட விரோதம்‌ இல்லையா? இதை மக்கள்‌ உணரவேண்டும்‌.
பெரிய கட்சிகள்‌ சின்ன கட்சிகளை அழிக்கும்‌ இச்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த வழக்கை போட்டேன்‌.

மேற்படி 4 எம்‌.பிக்களின்‌ பதவிகளை பறித்தால்தான்‌ இனி இதுபோலநடக்காது. நீதி கிடைக்கும்‌ என்று நம்புகிறேன்‌”என்றார்‌.

இதுகுறித்து தேர்தல்‌ கமிஷன்‌ அதிகாரிகள்‌ சிலரிடம்‌ பேசினோம்‌. “பெரிய கட்சிகள்‌ தேர்தல்‌ தேரத்தில்‌ சிறிய கட்சிகளை கூட்டணியில்‌ சேர்த்துக்‌ கொள்ளும்போது, பிடிவாதமாக அவர்களது சின்னத்திலேயே போட்டியிட வைக்கிறார்கள்‌. இது ஜனநாயக விரோதம்‌.

தவிர, தேர்தல்‌ விதிமுறைகள்படி வேட்பாளர்‌ எந்தக்‌ கட்சியின்‌ சின்னத்தில்‌ நின்று வெற்றி பெறுகிறாரோ, அக்கட்சியின்‌ உறுப்பினராகவேகருதப்படுவார்‌. அந்த வகையில்‌, வி.சி.க. கட்சியின்‌ பொதுச்செயலாளராக இருக்கும்‌ ரவிக்குமார்‌, டெல்லியில்‌ தி.மு.க. எம்‌.பியாகவே கருதப்படுவார்‌. அவருக்கு ஒதுக்கிய நிலைக்குழு பதவிகளில்கூட அவர்‌ தி.மு.க. எம்‌.பி. என்றே ஒதுக்கப்பட்டிருக்கும்‌. இதே நிலைதான்‌ ம.தி.மு.க. எம்‌.பி. கணேசமூர்த்திக்கும்‌.

நாடாளுமன்றத்தில்‌ கேள்விகள்‌ எழுப்பும்போது ரவிக்குமார்‌ தன்னை திமு.க. என்றே குறிப்பிடுவார்‌.வி.சி.க. எம்‌.பி. என்று குறிப்பிட்டால்‌ அவருக்கு எதிராகவே முடியும்‌.

அவ்வளவு ஏன்‌, விசிக. நடத்தும்‌கூட்டங்கள்‌, கட்சி சார்ந்த நடவடிக்கைகளில்‌ரவிக்குமார்‌ கலந்துகொண்டால்‌, அதை வீடியோ எடுத்து நீதிமன்றத்தில்‌ தாக்கல்‌ செய்தால்‌ அவரது பதவிக்கு ஆபத்துதான்‌. வருங்காலத்தில்‌ இதுபோன்ற தவறுகள்‌ நடக்காமலிருக்க, மேற்படி 4 எம்‌.பிக்களின்‌ பதவிகளை நீதிமன்றம்‌ பறிக்க
வேண்டும்‌” என்றார்கள்‌.

இதுகுறித்து தமிழக தேர்தல்‌ ஆணையர்‌ சத்யபிரதா சாகுவிடம்‌ கேட்டோம்‌. “இதுதொடர்பாக நீதிமன்றத்தில்‌ வழக்கு இருக்கிறது. அவர்கள்‌ அனுப்பிய கேள்விகளுக்கு உரிய பதிலை ஆவணங்களுடன்‌ அனுப்பிவிட்டோம்‌” என்று சுருக்கமாக முடித்துக்‌ கொண்டார்‌.

நிறைவாக ரவிக்குமாரிடம்‌ விளக்கம்‌ கேட்கதொடர்புகொண்டோம்‌. நமது அழைப்பைஅவர்‌ ஏற்காததால்‌, கட்சியின்‌ துணைப்‌பொதுச்செயலாளர்‌ வன்னியரசுவிடம்‌ கேட்டோம்‌. “இது கட்சி மேலிட விவகாரம்‌. ஆகவே, நான்‌ பதில்‌ கூற விரும்பவில்லை” என்று மறுத்துவிட்டார்‌.

இந்த நிலையில் இந்த வழக்கினை 4 மாதத்திற்குள் முடித்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் 5 மாநில தேர்தல் நடைபெற இருக்கிறது,அதற்குள் இந்த வழக்கை முடித்து வைத்தால் தான் இது போன்ற செயல்கள் வரும் தேர்தல்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாது.

வழக்கின் இறுதியில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவி பறிக்கப்பட்டால் மாநில தேர்தலோடு இடைத்தேர்தல் நடைபெறும்.

Exit mobile version