அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை மக்களிடையே எடுத்துச் செல்லும் நேரடி முகவர்களைக் குழுவில் சேர்ப்பது/ ஈடுபடுத்துவதற்கான நேர்முகத் தேர்வு 09.07.2021 அன்று அசோக் நகர் அஞ்சல் அலுவலகத்தில் (உதயம் திரையரங்கிற்கு எதிரே, சென்னை-600 083) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. விருப்பமுள்ள, கீழ் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டோர், தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய முழு விவரங்களையும், வயது, கல்வித்தகுதி, இருப்பிட சான்றிதழ்களையும் doplichennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 09.07.2021க்குள் அனுப்ப வேண்டும்.
தகுதி பெறுவதற்கான நிபந்தனைகள்:
a. கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி
b. வயது: 18-50
c. பிரிவுகள்: வேலை இல்லாதவர்கள்/ சுயமாக பணிபுரியும் கல்வி அறிவுடைய இளைஞர்கள்/ முன்னாள் படை வீரர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகிளா மண்டல் பணியாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்/ காப்பீடுகளின் விற்பனையில் முன் அனுபவம் உள்ளவர்கள்
d. விரும்பத்தக்க கூடுதல் தகுதிகள்:
• ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் முன் அனுபவம்
• கணினி சார்ந்த அறிவு
• உள்ளூர் பகுதி பற்றிய அறிவு
• சென்னையில் வசிப்பவர்
e. இதர காப்பீட்டு நிறுவனங்களில் ஆயுள் காப்பீட்டு பணிகளில் ஈடுபடுவோர் நேரடி முகவராக விண்ணப்பிப்பதற்கு தகுதி பெறமாட்டார்கள்
தேர்வு செய்யப்பட்ட தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ. 5000-ஐ ரொக்க பாதுகாப்பாக செலுத்த வேண்டும்.
இந்தத் தகவல், சென்னை நகர தெற்கு பிராந்திய அஞ்சல் அதிகாரிகளுக்கான மூத்தக் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















