தபால் ஆயுள் காப்பீடு / ஊரக தபால் ஆயுள் காப்பீடு பாலிசிகளை விற்பதற்காக குழு அமைப்பதற்கு / நேரடி முகவர்களை ஈடுபடுத்துவதற்கு நேர்காணல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கீழ்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், சென்னை 600002, அண்ணா சாலை தலைமை தபால் அலுவலக, தலைமை போஸ்ட் மாஸ்டர் அலுவலகத்தில் 21.08.2021ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
தகுதி நிபந்தனைகள்:
a. கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
b. வயது: 18 முதல் 50 வயது வரை.
c. பிரிவுகள்: மேலேயுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வேலையில்லாதோர் / சுய வேலை செய்யும் படித்த இளம்வயதினர், முன்னாள் ஆயுள் காப்பீடு ஆலோசகர்கள் / காப்பீடு நிறுவனத்தின் முன்னாள் முகவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சங்க தொழிலாளர்கள், ஓய்வுப்பெற்ற ஆசிரியர்கள், சுய உதவிக் குழுவினர்.
d. விரும்பத்தக்கவை: 1. காப்பீடு பாலிசிகளை விற்ற அனுபவம், கம்ப்யூட்டர் அறிவு / உள்ளூர் பகுதிகளை அறிந்திருப்பது. 2. சென்னை வாசி.
e. இதர காப்பீடு நிறுவனங்களில் ஆயுள் காப்பீடு பாலிகளை விற்பவர்கள், நேரடி முகவராக விண்ணப்பிக்க தகுதி இல்லை.
விண்ணப்பதாரர்கள் தங்களின் பயோ-டேட்டா, 2 பாஸ்போர்ட் புகைப்படம், வயது/கல்வி தகுதிக்கான ஆதாரம் / தேவையான சான்றிதழ்/ அனுபவ சான்றிதழுடன் நேர்காணலுக்கு வரலாம்.
இவ்வாறு, சென்னை, அண்ணா சாலை தலைமை தபால் அலுவலக தலைமை போஸ்ட் மாஸ்டர் திரு.எம். முரளி வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















