கடந்த 2016 ஆம் ஆண்டிலேயே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதன் பிறகு சில ஆண்டுகள் வரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்தது.மேலும் மேலும் கொரோனாதாக்கம், புதிய மாவட்டங்கள் பிரிப்பு என தள்ளி சென்றது.அதே போல் எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடாது என வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது
“சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களை எல்லாம் சரியான நேரத்தில் நடத்த முடிகிறபோது உள்ளாட்சித் தேர்தல்களை மட்டும் ஏன் குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்த முடியவில்லை? இனிமேலும் அவகாசம் கோராமல் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார். இதனால் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க ,அதிமுக,போன்ற எதிர்க்கட்சிகள் தயாரானது. தி.மு.க மட்டும் மௌனம் சாதித்து வந்தது. தற்போது உள்ள சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் தி.மு.கவிற்கு அது பாதகமாக அமையும் என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்தது தான் திமுகவின் மௌனத்திற்கு காரணம். மேலும் திமுக அரசு மீது மக்கள் மட்டுமல்ல சொந்த கட்சிக்காரர்களே அதிருப்தியில் உள்ளார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதால் பெண்கள் மத்தியில் நம்பிக்கை இழந்துள்ளது.
இந்த நிலையில் தான் வட கிழக்கு பருவமழை விடாமல் பெய்து வருவதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடுவது குறித்து, மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.என்ற தகவல் வெளியாகி உள்ளது.
,தலைநகர் சென்னையில் துவங்கி கன்னியாகுமரி வரை, வடகிழக்கு பருவமழை பரவலாக கொட்டி தீர்த்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மழை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகள், அரசின் நிவாரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனவே, தேர்தல் அறிவிப்பை தள்ளிப்போடுவது குறித்து, மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.இது ஆளும் திமுக அரசுக்கு ஆனந்தத்தை தந்துள்ளது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தடுமாறி வரும் திமுக அரசு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை காப்பாற்ற தவறியது. மேலும் நிவாரணமும் வழங்கவில்லை. 15 நாட்களாக சென்னைவாசிகள் மிதந்து வருகிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. திமுகவினரோ ரவுடிசத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தினம் தினம் கொலை சம்பவங்கள் அதிகமாகி வருகிறது. அதை தடுக்க திமுக அரசு திணறி வருகிறது.
அதேநேரத்தில், தேர்தல் வாக்குறுதிகள் பெண்களுக்கு 1000 ரூபாய், இன்னும் தரவில்லை,மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை குறைத்தும் தமிழக அரசோ குறைக்கவில்லை. என பல பிரச்சனைகளால் திமுக அரசு திண்டாடி வருகிறது. மேலும் 200 நாட்கள் ஸ்டாலின் அரசு எப்படி என நடத்தப்பட்ட சர்வேயில்வேதனை அளிக்கிறது என 65% மக்களுக்கும் மேற்பட்டோர் தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் பேரூராட்சி, நகராட்சி மாநகராட்சி தேர்தலை நடத்தினால் திமுக படு பாதாளத்திற்கு சென்றுவிடும் என தலைமைக்கு அறிவுத்தியுள்ளர்கள்.
மழை வெள்ளத்தை காரணம் காட்டி தேர்தலை தள்ளிபோடும் வேளையில் அரசு இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் ஆளும் கட்சி நிர்வாகிகள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.