மத்திய அரசு மும்மொழி கல்வி கொள்கையை அறிவித்தது இதற்கு தமிழ்நாட்டில் பல அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். முக்கியமாக யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தனு போன்றவர்கள் ஹிந்தி தெரியாது போடா என்ற வாசகத்துடன் அடங்கிய டீ சர்ட் அணிந்தது எதிர்ப்புகளை தெரிவித்தார்கள், அப்போது அவர்களுக்கு பதிலடியாக யுவன் ஹிந்தி பாடல் பாடியதை வைரல் ஆக்கினார்கள். நம் சிவகுமார் குடும்பம் மும்மொழி கல்வி குறித்து விமர்ச்சித்தார்கள். சூர்யா அறிக்கை எல்லாம் விட்டார், மூன்று மொழிக் கல்வி திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் இதை எப்படி சமாளிப்பார்கள் என கூறியவர் தான் சூர்யா அவரின் தம்பியும் எதிர்ப்பு தெரிவித்தார். தற்போது சம்பாதிக்க சிவகுமார் குடும்பம் பாலிவுட்டில் கால் பாதித்துள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் என அவரை காட்டி கொள்வதற்காக அவ்வப்போது அறிக்கை விடுபவர் நடிகர் சூர்யா அவரின் தயாரிப்பு நிறுவனம் 2D என்டெர்டெய்ன்மென்ட் ஆகும். நீட் மற்றும் மும்மொழி கல்வி குறித்து அறிக்கை விட்டவர்தான் இந்த அறிக்கை நாயகர் சூர்யா.
ஹிந்திக்கு எதிரக குரல் கொடுத்த அறிக்கை நாயகர் தற்போது அவரது 2D என்டெர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்தியில் சூரரைப் போற்று திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு சுதாகொங்கரா இயக்க, சூர்யா, மோகன்பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த ‘சூரரைப் போற்று திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி வெளியானது சூரரை போற்று .ஏர் டெக்கான் நிறுவனத்தின் அதிபர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ‘சூரரைப் போற்று’ திரையாக்கம் செய்யப்பட்டிருந்தது.
‘சூரரைப் போற்று’ திரைப்படம், பிரம்மாண்டத் தயாரிப்பாக இந்தியிலும் வெளிவர இருக்கிறது.
.