கடந்த 8 ஆம் தேதி டில்லி சட்டசபை தேர்தல் நடைபெற்றது இதன் வாக்கு என்ணிக்கை நேற்று நடைபெற்றது இதில் ஆம்ஆத்மி பெற்றது காங்கிரஸ் மிக மோசமான தோல்வியை அடைந்தது, பாஜக வாக்கு சதவீதத்தில் முன்னேறியது. இந்த நிலையில் ஆம் ஆத்மி வெற்றியை கொண்டாடிய ஜாமினில் வெளியே இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, மகிளா காங்கிரஸ் தலைவி முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளுமான ஷர்மிஸ்தா முகர்ஜி.கிழித்து தொங்கவிட்டுள்ளார்.
டில்லி சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் இம்முறையும் காங்கிரஸ் ஒரு இடம் கூட பெறாமல் படுதோல்வி அடைந்தது. அத்துடன் 63 தொகுதிகளில் காங்கிரஸ், வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
இந்நிலையில் டில்லி தேர்தல் முடிவுகள் குறித்து ஜாமீன் சிதம்பரம் நேற்று வெளியிட்ட டுவீட்டில், ஆம்ஆத்மி வென்றதன் மூலம், மூர்க்கத்தனம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளையும் சேர்ந்த டில்லி மக்கள், பிரிவினை, ஆபத்தான திட்டங்கள் கொண்ட பா.ஜ.க வுக்கு பெரிய தோல்வியை கொடுத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் காங்.கிரஸ் பெற்ற தோல்வி பற்றி ஏதும் குறிப்பிடவில்லை.
ஜாமீன் சிதம்பரத்தின் இந்த டுவீட்டிற்கு பதிலளித்துள்ள டில்லி மகிளா காங்கிரஸ் தலைவி ஷர்மிஸ்தா முகர்ஜி, உங்கள் மீதுள்ள மதிப்பு காரணமாக ஒன்றை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். பா.ஜ.க முதல் மாநில கட்சிகள் வரை தோற்கடிக்க வேண்டும் என்ற பணியை சிறப்பாக செய்து விட்டீர்களா? இல்லை என்றால், நமது படுதோல்வி பற்றி அக்கறை கொள்ளாமல் எதற்காக ஆம்ஆத்மியின் வெற்றிக்காக சந்தோஷப்படவோ, அதை கொண்டாடவோ வேண்டும்? அது உண்மை என்றால் வாயை மூடி அமைதியாக இருக்க வேண்டும். என கிழித்து தொங்கவிட்டார்.
ஆம்ஆத்மியின் வெற்றியை சிதம்பரம் புகழ்ந்து பேசியது காங்கிரஸ், கட்சிக்குள் பலரின் எதிர்ப்பையும் பெற்றுள்ளது.