பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஆரம்பத்திலிருந்து திமுக ஐடி பிரிவிடம் சில தகவல்கள் பரிமாறி கொள்வதற்கு கேட்கும்போது, அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க மறுத்துவிட்டது. ஐடி பிரிவு. பின் சமீபத்தில் தொடங்கிய “ஒன்றிணைவோம் வா” திட்டத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் திமுகவிர் அனைவரும் பிரசாந்த் கிஷோர் குழுவினருடன் இணைந்து பணியாற்ற ஏற்பாடுகள் நடந்த நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் ஒத்துழையாமையால் “ஒன்றிணைவோம் வா” திட்டம் படு தோல்வி அடைந்துவுள்ளது .
திமுகவில் இருந்து வி.பி.துரைசாமி பாஜக பக்கம் வந்ததில் இருந்து திமுகவில் இருந்து அடுத்தடுத்து ஒவ்வொருவராக பாஜக பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள். இது திமுக தலைமையை ஆட்டம் காண வைத்துள்ளது.அக்கட்சியினர் ஸ்டாலின் மீது உள்ள நம்பிக்கையை இழந்து பாஜக பக்கம் வந்து கொண்டு இருக்கின்றனர். திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் குக செல்வம் பாஜக பக்கம் சென்ற பின், அடுத்தது யார் என்கிற பரபரப்பு தமிழக அரசியலில் நிலவி வருகிறது.
பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், பல மாநிலங்களில் தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்ட பிரசாந்த் கிஷோர் தற்போது பல கோடி ஒப்பந்தத்தில் திமுகவின் 2021 சட்டமன்ற தேர்தல் வியூக வகுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் வெற்றிக் கொடி நாட்டி வந்த பிரசாந்த் கிஷோர் மற்றும் அவருடைய குழுவினருக்கு திமுகவில் பணியாற்ற ஒப்பந்தம் போடப்பட்டதில் இருந்தே பிரச்சனைக்கு மேல் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரின் குடும்பத்தினரை தவிர திமுகவினர் யாருக்கும், பிரசாந்த் கிஷோர் திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளராக நியமிக்கப்பட்டதற்கு உடன்பாடு இல்லை. இதனால் திமுகவில் உள்ள அனைத்து அணியினரும் பிரசாந்து கிஷோர் வகுக்கும் வியூகங்கள் அனைத்திற்குமே ஆர்வம் காட்டவில்லை. இதனால் பிரசாந்த் கிஷோர் வகுக்கும் அரசியல் வியூகம் அனைத்தும் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருகின்றது.
2021்சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் தேர்வில் பிரசாந்த் கிஷோர் தலையீடு இல்லாமல் இருக்காது என ஆரம்ப முதலே பேசப்பட்ட நிலையில், அதற்குள் அவர் வகுக்கும் வியூகம் அனைத்தும் தோல்வியை தழுவினால், கட்சி தலைமையே அவரிடம் ஆலோசனை கேட்பதை குறைத்துக் கொண்டு திமுக மாவட்ட செயலாளர்களிடமும், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஆலோசனை கேட்டு செயல்படும் என்பதற்காகவே பிரசாந்த் கிஷோர் வியூகங்கள் அனைத்தும் தோல்வி அடையச் செய்வதில் திமுகவினர் இப்படி நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடும் அப்செட் ஆன பிரசாந்த் கிஷோர், திமுக தலைவர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு திமுகவினர் தங்கள் குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாகவும், இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் எங்களை ஏதும் குறை சொல்லக் கூடாது என்று மன்னிப்பு கேட்டுள்ளார. மேலும் நாங்கள் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பணியாற்றி உள்ளோம், ஆனால் இங்கே திமுகவில் மட்டும் தான் பல சிக்கலை சந்தித்து வருகிறோம் என கூறியுள்ளதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து ஸ்டாலின், திமுக மூத்த தலைவர் ஒருவரை தொடர்பு கொண்டு பேசிய போது, பிரசாந்த் கிஷோர் எதிர்ப்புக்கு தொடக்கமே திமுக ஐடி விங் தான் காரணம் என்றும்.ஐடி விங்கை வழிநடத்த கூடிய அமெரிக்காவில் படித்து அங்கேயே வேலை செய்த அவர், திமுக அரசியல் வியூக வகுப்பாளராக தன்னை நியமிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில், பிரசாந்த் கிசோர் நியமிக்கப்பட்டதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதன் வெளிப்பாடுதான் இதெல்லாம், என அந்த திமுக மூத்த தலைவர் ஸ்டாலினிடம் கூறியுள்ளார்.