தி.மு.கவின் வழிகாட்டியம் முன்னோடியுமான பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு!

தி.மு.க வின் வழிகாட்டி ஸ்டாலினின் மூளையுமான தமுக்கவி அழிவிலிருந்து காப்பாற்றிவரும் காப்பான், அரசியல் சாணக்கியர் என பல முகங்கள் கொண்ட பிரஷாந்த் கிஷோர் பாண்டே, மீது மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளது ,

பீகார் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பலம் வாய்ந்த தலைவராக கருதப்பட்ட தி.மு.க அருவருடி பிரஷாந்த் கிஷோர் பாண்டேயை, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், சமீபத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கினார். அதன் பின் , பிரஷாந்த் கிஷோர் பாண்டேயை தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்ள ஆம்ஆத்மி, தி.மு.க உள்ளிட்ட பல கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு முயற்சித்து வருக்கின்றன. பிரசாந்த் கிஷ்ரோ 350 கோடிக்கு தி.மு.கவை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்நிலையில் பீகார் சட்டசபை தேர்தலுக்காக பிரசாந்த் கிஷோர் பீகார் முழுவதும் சுமார் 100 நாட்கள் பயணம் செய்து பிரசாரம் செய்ய திட்டமிட்டார் நாட்டில் உள்ள 10 சிறந்த மாநிலங்களில் பீகாரை இடம்பெற செய்வதாக கூறிய பிரஷாந்த் கிஷோர் பாண்டே, அதற்காக “பாத் பீகார் கி” (Baat bihar ki) என்ற திட்டத்தை அறிவித்திருந்தார்.

பீகாரில் சிறந்த இளம் தலைவர்களை உருவாக்கப் போவதாகவும் கூறி இருந்தார்.

இந்நிலையில் ஷாஸ்வந்த் கவுதம் என்ற இளைஞர், தான் ஓசாமா என்ற நபருடன் இணைந்து உருவாக்கிய “பீகார் கி பாத்” (Bihar ki Baat) என்ற வார்த்தையை பிரஷாந்த் கிஷோர் திருடகி விட்டதாக பாட்னாவின் பாடலிபுத்திரா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை அடுத்து பிரஷாந்த் கிஷோர் பாண்டே மீது சட்டப்பிரிவு 420 கீழ், 406 (மோசடி மற்றும் கிரிமினல் குற்றத்திற்கு சமமான நம்பிக்கை மோசம்) பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version