கோவை செல்வபுரம் எல்.ஐ.சி காலனி அருகில் பாஜக சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட மகளிர், 108 பானைகளில் பொங்கல் வைத்தனர். இந்நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டனர். பொங்கல் விழாவை தொடர்ந்து பானை உடைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பானையை உடைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழகத்தில் பொங்கல் விழா பாரதிய ஜனதா கட்சி சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரைக்கு பாரத பிரதமர் மோடி வர விரும்பினார். 10008 பானைகளில் பொங்கல் வைக்க பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஒமைக்ரான் தொற்று காரணமாகவும், தமிழக அரசின் கட்டுப்பாடுகள் காரணமாகவும் அவரால் வர இயலவில்லை” என தெரிவித்தார்.
திமுக சார்பில் திருவள்ளுவர் காவி உடை அணிந்த போஸ்டர் தொடர்பாக பதிலளித்த அண்ணாமலை, திமுக நண்பர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையான இந்து வாழ்வியல் முறைப்படி திருவள்ளுவர் வாழ்வியலை நடத்தியவர், திமுக அவரை வைத்து மத அரசியல் செய்கிறது. குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக வாகனங்கள் புறக்கணிக்கப்பட்டதாக கூறிய நிலையில் அது தொடர்பாக பேசிய அண்ணாமலை. ”அது அரசின் கருத்து அல்ல. குடியரசு விழா அணிவகுப்பு பாதுகாப்பு துறை சார்பில் நடத்தப்படுகிறது. ஆறு மாதத்திற்கு முன்பாகவே குழு அமைக்கப்பட்டு, ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஒவ்வொரு வருடமும் அதற்கான தீம் (கரு பொருள்) கொடுக்கப்படும், கேரளா மாநிலம் கூட விளக்கம் கொடுத்துள்ளது. நாராயண குரு, ஆதிசங்கராச்சாரியார் இடம் பெற வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் கேரளா அரசு ஒப்புக்கொள்ளவில்லைநிச்சயமாக முழு விபரம் அறிந்து விளக்கம் அளிப்பேன்.
அதே போல் வ.உ.சி, வேலுநாச்சியார் போன்ற தலைவர்கள் சர்வதேச அளவில் தெரியாத தலைவர்கள் என அரசு தரப்பில் பதில் அளிக்கவில்லை. அது முற்றிலும் பொய். தமிழக அரசின் வாகன பேச்சு வார்த்தை கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. எல்லா மாநிலத்திற்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. முழு விபரம் அறிந்து சொல்கிறேன்.
கருத்து சுதந்த்திரம் முக்கியமானது. 2011 என்.சி.பி.சி.ஆர் அமைப்பு குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்பு. அந்த அமைப்பு ஒரு வழிகாட்டுதல் ரியாலிட்டி ஷோவில் குழந்தைகள் எப்படி நடத்தபப்டவேண்டும் என வழிகாட்டுதலில் வெளியிடப்ப்ட்டுள்ளது. அதில் குழந்தைகள் வாயிலாக அரசியல் கருத்துக்கள் வெளியிடுவது தவறு, குழந்தைகளுக்கு டைலாக்குகள் எழுதி கொடுத்து இவ்வாறு ரியாலிட்டி ஷோவில் பேச வைத்திருப்பது தவறு.
இது கண்டனத்துக்குரியது. கருத்து இருந்தால்தான் சுதந்திரம் இதில் கருத்து சுதந்திரமே கிடையாது. சட்டப்பூர்வமாக ஆதாரப்பூர்வமாக என்சிபிசிஆர்-க்கு எதிரானது. பொது மன்னிப்பு கோர வலியுறுத்தியுள்ளோம். அதற்கு அடுத்தப்படியாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் . கர்நாடகாவில் மேகதாது அணை விவகாரம் ஆக நான் பேசுவதற்கு கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடுமையாக என்னை விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக திமுக அரசு இதுவரை எதுவும் பேசவில்லை. தமிழர்களுடைய உரிமையை பாஜக அரசு விட்டுக் கொடுக்காது” என்றார்.