மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டு சிறை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி!

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் அதன் தாக்குதலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இது வரை இந்தியாவில் சுமார் 21 ஆயிரம் பேர் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அதில் 680 பேர் மரணமடைந்துள்ளார். இந்த நிலையில் மருத்துவர்கள் செவிலியர்கள் சுகாதர பணியாளர்கள் காவலர்கள் அரசு அதிகாரிகள் என பல்வேறு ஊழியர்கள் கொரோனாவிற்கு எதிராக தன்னுயிரை பணயம் வைத்து போராடி வருகின்றார்கள். ஆனால் சில தனியார் அமைப்புககளை சார்ந்தவர்கள் மருத்துவர்கள் மீதும் செவிலியர் மீதும் எச்சில் துப்புவது தாக்குவது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தேசத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கொரோனவால் இறந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் சில அரசியல் கட்சியின் தூண்டுதலால் ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்களை தாக்கி வருவது குறிப்பிட தக்கது. இந்த நிலையில் மத்திய அரசு கொரோனா தடுப்பு பணியில் உள்ள டாக்டர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

‘கொரோனா’ தொற்று சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் , செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களை தாக்குபவர்கள் மீது, ஜாமினில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு, ஆறு மாதம் முதல், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கும் வகையில், மத்திய அரசு, அவசர சட்டம் கொண்டு வந்தது.

இதற்கான முடிவு நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இதற்காக 1897 தொற்றுநோய் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து, இந்த சட்டம் ஒப்புதலுக்காக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் மூலம் இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

Exit mobile version