கட்டுமானப் பொருட்களான சிமெண்ட், கம்பிகள், செங்கல், மணல் போன்ற பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து உள்ளது அதிலும் சிமெண்ட், கம்பிகள் விலை அதிகமாக உயர்ந்து உள்ளது. ஒரு நாட்டின் பொருளாதாரமே கட்டிட தொழிலையே அடிப்படையாகக் கொண்டது. இதன் விலை உயர்வால் கட்டுமானத் தொழிலே முடங்கும் அபாயம் உள்ளது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இன்றி உள்ளனர்.
இதைச் சார்ந்த தொழில்களான கார்பெண்டர், பெயிண்டிங், சென்டிரிங், ஒயிரிங் ,மார்பெல்ஸ் போன்ற தொழில்கள் பாதித்து அதன் சார்ந்த தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளனர். மணல் விலை உயர்வு மற்றும் திடீரென்று எம் சாண்டு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
காரணம் அதன் உரிமையாளர்கள் முந்தைய ஆட்சியாளர்களால் உரிமை பெற்றதால் அதை புதுப்பிக்க இயலவில்லை. கட்டுமானத் தொழிலை நம்பிதான் எல்லாத் தொழில்களும் உள்ளன இதை உடனடியாக சரிசெய்ய வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்த சூழலில் பொதுமுடக்கத்தை பயன்படுத்தி, கட்டுமான பொருட்களின் விலை செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளதாக அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். 30 முதல் 40 சதவிகிதம் வரை பொருட்களில் விலை உயர்ந்துள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அனைத்து கட்டுமானப் பொருட்களின் விலையும் 40 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதால் கட்டுமான பணிகள் தேக்கம் அடைந்துள்ளதாக கட்டுமான பொறியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் இந்த தொழில் சார்ந்த 20 லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக கூறுகின்றனர்.
விண்ணை முட்டிய கட்டுமான பொருட்களின் விலை! விடியல் காணுமா கட்டுமான துறை !