செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த வாயலூரில் 30-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளை வைத்து சிறுவர் காப்பகம் நடத்தி வருபவர் பாதிரியார் சார்லஸ் (வயது 59), இவர் தனது காப்பகத்தில் இருந்த 17 வயது சிறுமியை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்ததன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பமானார்.
அந்த சிறுமியின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை பல இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த பாதிரியார் சென்னை கோயம்பேட்டில் ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோயம்பேட்டில் உள்ள உணவகத்தில் அவர் சாப்பிட வந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் உஷா ஆகியோர் கோயம்பேடு போலீசாரின் உதவியுடன் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் மாமல்லபுரம் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவருக்கு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 1½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவரை தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாதியார் சார்லஸ் கர்ப்பமாக்கி சிறுமிக்கு, 2½ வயதில் குழந்தை உள்ளது. குழந்தையுடன் உள்ள அந்த சிறுமி தற்போது சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















