பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆர்டிஓ) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து செலுத்தக் கூடிய ‘பிரலே‘ ஏவுகணை, ஒடிசா கடற்கரைப் பகுதியில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவிலிருந்து 2வது முறையாக இன்று (23.12.2021) செலுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. முதன் முறையாக அணு ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய ஏவுகணை அடுத்தடுத்த இரண்டு நாட்களில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை அதன் அனைத்து இலக்குகளையும் எட்டியதுடன், இந்த புதிய ஏவுகணை அதன் திட்டமிட்ட இலக்கை துல்லியமாக தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்றைய சோதனையின் போது, ஆயுதங்களின் துல்லியத் தன்மை மற்றும் ஆயுதங்களின் அழிப்புத்திறனை பரிசோதிப்பதற்காக, ‘பிரலே’ ஏவுகணை அதிக ஆயுதங்களை சுமந்தபடி, புதிய பகுதியை குறிவைத்து பரிசோதிக்கப்பட்டது.
விஞ்ஞானிகளின் இந்த சாதனைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர்ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சிப் பிரிவின் செயலாளரும் டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி ஆகியோர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை 150 முதல் 500 கிமீ வரையிலான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. 500 முதல் 1,000 கிலோ வரையிலான எரிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, மொபைல் லாஞ்சரில் இருந்து ஏவ முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பிரலே’ என்ற இந்த ஏவுகணை surface-to-surface வகை பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். மேலும், தாக்க வரும் ஏவுகணைகளை இடை மறித்துத் தாக்கி தாக்கி அழிக்கும் வகையிலும் இந்த ஏவுகணை மேம்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர நடுவானில் குறிப்பிட்ட தூரத்தை எட்டியவுடன், தனது பாதையை மாற்றியமைக்கும் திறனையும் இந்த ஏவுகணை கொண்டுள்ளது.