ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் வளர்ச்சி என்பது அங்கு இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. இதில் முக்கிய பங்கு வகிப்பது சாலை வசதிகள். அந்த வகையில் இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு ஜூலை நிலவரப்படி மொத்தம் 5173 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் அதாவது பெரும்பாலும் ஆறு வழி அல்லது எட்டு வழி சாலைகளான எக்ஸ்பிரஸ் வே அமைந்துள்ளது. மேலும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் சாலைகளை விரிவுபடுத்துதல், புதிய நான்கு மற்றும் ஆறு வழிச்சாலைகள் அமைப்பது, எக்ஸ்பிரஸ் வே போன்ற சாலைப் பணிகளில் மத்திய அரசு அதிக முனைப்பு காட்டி வருவது இதில் தமிழகத்தின் மீது கவனம் செலுத்தி வருகிறது மோடி தலைமையிலான அரசு.
இந்தநிலையில் தான் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் இடஙக நிலையில் தமிழகத்தில் 25 புதிய நெடுஞ்சாலைகள் அமைக்க ரூ.85,512 கோடி ஒதுக்கி உள்ளது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு..தமிழகத்தில் 2,170 கி.மீ. நீளமான புதிய தேசிய நெடுஞ்சாலைகள், உயர்மட்ட மேம்பால சாலைகளும் அமைக்கப்பட உள்ளன.இதன் மூலம் சென்னை, கோவை.மதுரை, திருச்சிஉள்ளிட்ட 15 மேற்பட்ட மாவட்டங்கள் பயன்பெறுகின்றன.சரக்கு மற்றும் பயணியர் போக்குவரத்துக்கு இந்த சாலைகள் பெரிதும் உதவும்
இதனை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணியை ரூ.63,246 கோடி மதிப்பீட்டுச் செலவில் மத்திய துறை திட்டமாக நிறைவேற்ற மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.மேலும் மெட்ரோ திட்டத்திற்கு 65% பங்களிப்பை மத்திய அரசு வழங்குகிறது ஆனால் அதை ஸ்டிக்கர் ஒட்டி கொண்டாடி வருகிறது தமிழக அரசு.
இது குறித்து சமூகவலைதளத்தில் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், ராணிப்பேட்டையில் இருந்து ஆந்திரப் பிரதேச எல்லை வரை 28 கி.மீ., தொலைவில் நெடுஞ்சாலை கட்ட அனுமதி வழங்கி உள்ளோம். இந்த திட்டத்திற்கு ரூ.1,338 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். இந்தநிலையில் ராணிப்பேட்டையில் 10 கிமீ புறவழிச்சாலை, 4 பெரிய பாலங்கள் மற்றும் 2 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.4 வழி பிரதான பாதையில், இருபுறமும் நடைபாதைகள் இருக்கும். வாலாஜாபேட்டை-ராணிப்பேட்டையில் 10 கிமீ புறவழிச்சாலை, 4 பெரிய பாலங்கள் மற்றும் 2 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பெங்களூரு, திருப்பதி மற்றும் வேலூர் போன்ற நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்தை மேம்படுத்தும். இது உள்ளூர் தொழில்களை ஊக்குவிக்கும்.ராணிப்பேட்டையில், 2025ம் ஆண்டு நிறைவடையும் நிலையில், இந்தத் திட்டம் கணிசமான பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும். அதே நேரத்தில் 2 வழிச் சாலைகள் உள்ளூர் போக்குவரத்திற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி 3 முறையாக பதவியேற்ற பின் இந்த 6 மாத காலத்தில் தமிழகத்திற்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக மோடி அரசு நிதி ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட எக்ஸ்பிரஸ் வே சாலைகள் தமிழகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் வேலைகள் சற்று மந்தமாகவே உள்ளது. ஏனென்றால் மாநில அரசின் ஒத்துழையாமை நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சனை, சாலைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு, மக்கள் போராட்டம் உள்ளிட்டவை காரணமாக உள்ளது. இதனால் தமிழகம் பின்தங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















