தமிழக அரசியலில் நேற்று முன்தினம் புயல் வீச தொடங்கியது, பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் திமுக அரசு செய்யவிருக்கும் ஊழலை வெளிப்படையாக தெரிவித்தார். மேலும் அதற்கான ஆதாரங்கள் கையில் உள்ளதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி தமிழக அரசியிலில் புயலினை கிளப்பினார்.
அந்த புயல் இன்னும் வேகமெடுப்பதற்கு பிரதமர் மோடி அவர்கள் அண்ணாமலைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுதான் இன்றைய ஹாட் டாபிக். ஆமாம் தமிழகத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியின் அராஜகத்தை தாண்டி பாஜக 381 இடங்களை கைப்பற்றியது. உள்ளாட்சி தேர்தலில் வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க சென்னை பாஜக தலைமை அலுவலமான கமலாலயத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அதில் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர் பொன்னார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சி முடிவடைந்த கையோடு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தான் திமுகவின் ஊழலை வெளிகொண்டுவந்தார்,பாஜக தலைவர் அண்ணாமலை. மேலும் அந்த நிகழ்ச்சி குறித்து அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டேர் பக்கத்தில் பகிர்ந்தார்.
அதை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில்
தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி. அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம்.
என பதிவிட்டுள்ளது வாழ்த்து சொல்வதற்கு மட்டுமல்ல தமிழகத்தில் பாஜக வேரூன்றிவிட்டது இதை ஆலமரமாக வளரவேண்டும். இதற்கு நான் உறுதுணையாக இருப்பேன் என கூறியுள்ளார். இதுவரை பெரிய அளவில் தமிழக அரசியலில் பிரதமர் மோடி தலையிட்டது இல்லை.
தமிழக நலத்திட்டங்கள் குறித்தும் தமிழ் மொழி குறித்தும் தான் கவனம் செலுத்தி வந்தார், ஆனால் இந்தமுறை அரசியலில் நேரடியாக கவனம் செலுத்தியுள்ளார். அதாவது தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேர்தல் அல்ல தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மட்டுமே நடைபெற்ற தேர்தல் இதற்கு பிரதமர் முக்கியத்தும் அளித்துள்ளது. அரசியலில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஊழலை வெளியிட்ட அண்ணாமலை பிரதமர் மோடியின் வாழ்த்து எல்லாம் திமுகவினரை சற்று கிலியில் ஆழ்த்தியுள்ளது, எப்போதும் இல்லாமல் பிரதமர் நேரடியாக வாழ்த்து சொன்னது பாஜகவினரை குஷிப்படுத்தியுள்ளது. இனி அண்ணாமலையின் ஆட்டம் வேறு மாதிரியாக இருக்கும். திமுகவிற்கு இனி திண்டாட்டம் தான் என பாஜகவினர் கூறி வருகிறார்கள்.
இனி திமுக அமைச்சர் ஊழல் பட்டியலை தயார் செய்யுங்கள் என தமிழக பாஜகவிற்கு அசைமென்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம்,
பா.ஜ.க சரியான எதிர்கட்சியாக வளர ஆரம்பித்துள்ளது. அதிமுக சசிகலா எடப்பாடி ஓ பன்னீர்செல்வம் இடையில் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை என கடும் சிக்கலில் சிக்கி சரியும் நிலையில் உள்ளது.கம்யூனிஸ்டுகள் காலாவதியாகிவிட்ட நிலையில் தமிழக அரசியல் களம் பா.ஜ.கவுக்கும் திமுகவுக்கும் நேரடி மோதல் களமாக மாறிவிட்டது