Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

பிரதமர் மோடியின் தமிழக வருகை! கருத்து கணிப்பு முடிவுகள்! உதறலில் ஸ்டாலின்!வானதி சீனிவாசன் பதிலடி

Oredesam by Oredesam
March 1, 2024
in செய்திகள், தமிழகம்
0
vanathi Srinivasan

vanathi Srinivasan

FacebookTwitterWhatsappTelegram

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவியுமான வானதி சீனிவாசன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற திருநெல்வேலி, பல்லடம் பாஜக பொதுக் கூட்டங்களுக்கு திரண்ட லட்சக்கணக்கிலான மக்கள் கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரையும் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

அதனால் தான், தனது பிறந்தநாளை ஒட்டி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் புலம்பித் தீர்த்திருக்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின் . அதில், ‘பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வரத் தொடங்கியிருக்கிறார். அவர் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது’ எனக் கூறியிருக்கிறார். பிரதமரின் முகத்தில் தோல்வி பயம் தெரியவில்லை. பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வரத் தொடங்கி உள்ளதால், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தான் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது.

திமுகவின் ஆதரவு ஊடகங்கள் எடுத்த கருத்துக் கணிப்பில், இந்தத் தேர்தலில் பாஜக மட்டும் 18 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகளைப் பெறும் எனத் தெரிய வந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள கலக்கத்தால் தான், பிரதமரை முதலமைச்சர் விமர்சனம் செய்திருக்கிறார். திருநெல்வேலி பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற லட்சணக்கான மக்கள் முன்பு பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக தடைபோட்டு வருவதைச் சுட்டிக் காட்டினார்.

அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின், ‘எந்தத் திட்டத்திற்கு திமுக அரசு தடையாக இருந்தது?’ எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார். எல்லாவற்றையும் பிரதமரே சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. நிலம் கையகப்படுத்திக் கொடுப்பதில் திமுக செய்து வரும் தாமதத்தால், கோவை விமான நிலைய விரிவாக்கம் தடைபட்டு நிற்கிறது. சென்னை – பெங்களூரு அதிவிரைவுச் சாலை திட்டத்திலும் தமிழகப் பகுதியில் ஏற்பட்டு வரும் தாமதத்திற்கு திமுக அரசே காரணம்.

கிராமப்புறங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, ஏழை மாணவர்களின் நலனுக்கான ‘நவோதயா பள்ளிகள் திட்டத்தை’ திமுக ஏற்க மறுக்கிறது. மேலும், பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய திமுக அரசு மறுத்துள்ளதால், தமிழ்நாடு பாதிக்கப்பட்டு உள்ளது. நெடுஞ்சாலைகள், விரைவுச்சாலைகள், மேம்பாலங்கள், ரயில்வே திட்டங்கள், துறைமுக திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு உள் கட்டமைப்பு திட்டங்களுக்கு, திமுக அரசு போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை.

இதுபற்றி நாடாளுமன்றத்திலேயே மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். அரசியல் ரீதியாக வேறுபட்டிருந்தாலும், அரசு நிர்வாகம் என்று வரும்போது மத்திய அரசுடன், மாநில அரசுகள் இணக்கமாகச் செல்ல வேண்டும். அப்போதுதான், மக்கள் நலத் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்த முடியும்.

ஆனால், ஊழல், குடும்ப ஆட்சிக்கு தடையாக மத்திய பாஜக அரசு இருப்பதால், மத்திய அரசு எதைச் செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கையைத் திமுக கடைப்பிடித்து வருகிறது. மக்களை ஏமாற்றுவதற்காக, பிரதமர் வீட்டு வசதி திட்டம், குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் என மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு பெயர் மாற்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சித்து வருகிறது, திமுக. திமுகவின் ஏமாற்று வேலைகள் இனியும் எடுபடாது.

மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் திரும்பத் திரும்ப மத்திய அரசு மீது திமுக குறை சொல்கிறது. மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதில் பல தடைக் கற்கள் இருந்தாலும், தமிழ்நாட்டு மாணவர்கள் நலனுக்காக, திமுக அரசின் எதிர்ப்பையும் மீறி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை பாஜக அரசு செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. மூன்றாவது முறையாக மோடி அரசு அமைந்ததும், மதுரையில் பிரம்மாண்டமாக எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

செடிகள் செழிப்பாக வளர இந்த ஒரு உரம் போதும்! காய்கறி கழிவுகளை வைத்து, வீட்டிலேயே உரம் தயாரிக்கலாம்.

செடிகள் செழிப்பாக வளர இந்த ஒரு உரம் போதும்! காய்கறி கழிவுகளை வைத்து, வீட்டிலேயே உரம் தயாரிக்கலாம்.

July 11, 2020

பிரசாந்த் கிஷோர் தலைமையில் CAA எதிர்ப்பு போராட்டம் நடைபெறுகிறது – பாஜக நிர்மல்குமார்

February 19, 2020
A government bus driver who showed arrogance to a female passenger

இது என்ன உங்க அப்பன் வீட்டு வண்டியா? கைக்குழந்தையுடன் நின்ற பெண் பயணியிடம் திமிர் காட்டிய அரசு பேருந்து ஓட்டுநர்?

January 7, 2024
பாகிஸ்தான்

நான்கு நாள் தான் பாகிஸ்தான் சோலி முடிந்துவிடும்! உக்ரைனால் வந்த பிரச்சனை! ஆயுத பற்றாக்குறையால் திணறும் பாகிஸ்தான்!

May 5, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x