உலகத் தலைவர்களின் திறமையை மதிப்பீடு செய்து வெளியிடும் அமெரிக்கன் டேட்டா இண்டெலிஜென்ஸ் நிறுவனமானமார்னிங் கன்சல்ட் நேற்று அதாவது 17-06-2021 அன்று வெளியிட்டுள்ளகணிப்புகள் படி உலகத் தலைவர்களில் திறமை யானவராக மோடி 66% ஆதரவுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.
கொரோனா பெருந்தொற்று (Corona Pandemic) காலத்தில் அவரது செல்வாக்கு சிறிது சரிந்ததாக கூறப்படும் நிலையிலும், உலக தலைவர்களை பின்னுக்கு தள்ளி விட்டு முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியின் பிரதமர் மரியோ டிராகி 65 சதவீதம் ஆதரவு பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.மூன்றாவது இடத் தில் மெக்சிகன் அதிபர் ஆண்ட்ரூஸ் இருக்கிறார்.அமெரிக்கா இங்கிலாந்து பிரான்ஸ் ஜெர்மன் கனடா போன்ற வளர்ந்த நாடுகளின் தலைவர்களை தோற்கடித்து பிரதமர் மோடி உலக த்தலைவர்களில் நம்பர் 1 இடத்தில் மோடி இருப்பது இந்தியாவுக்கு கிடைத்துள்ள பெருமையாகும்.உலகம் போற்றும் ஒரு சிறந்த தலைவரை நம் பிரதமராக கொண்டதில் பெருமை கொள்வோம்.!