பாயும் இந்தியா! பம்மும் சீனா ! பிரச்சனைகளை பேசியே தீர்த்துக்கொள்ளலாம் சீனா அறிக்கை!

எல்லைப்பகுதியில் இந்திய சீன வீரர்க ளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சீன வீரர்கள் 43 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.பல் சீன வீரர்கள் காயம் அடைந் துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வீரர்கள் தரப்பிலும் 20 ராணுவவீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளார்கள் மேலும் 4 ராணுவ வீரர்கள் சிகிச்சை பெற்று வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆக இப்பொழுது தான் எல்லை பஞ்சாயத்து சூடு பிடிக்க ஆரம்பித்து உள்ளது.சீன வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கு பகு தியில் இருந்து வெளியேறும் பொழுது கோபத்துடன் இந்திய வீரர்கள் மீது கல் எறிந்து தாக்குதல் நடத்திய தாகவும் பதிலுக்கு இந்திய வீரர்கள் தாக்கிய தாகவும் தெரிகிறது.

இன்று உலகமே உற்றுநோக்கும் இருநாடுகள் சீனாவும் இந்தியாவும் கொரோனா வைரஸை உலகிற்கு பரவ செய்தது சீனா என்ற குற்றச்சாட்டால் அந்த நாட்டில் முதலீடு செய்த நாடுகள் அனைத்தும் வெளியேற தொடங்கியுள்ளது. அது மட்டுமில்லமல் இந்தியாவும் சீனாவுடனான ஒப்பந்தங்களை ரத்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது. சீனாவில் வெளியேறிய நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில் இந்த தாக்குதல் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

2014 ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சி அமைந்தவுடன் சீனாவின் கனவு திட்டமான முத்துமாலை சிதறடிக்கப்பட்டது. தற்சமயம் அவர்களுடன் பாகிஸ்தானின் துறைமுக பணி மட்டுமே உள்ளது அவர்கள் திட்டமிட்ட இலங்கை மற்றும் இதர நாடுகளின் மூலமாக திட்டமிடப்பட்டிருந்த பணிகளை நாம் முறியடித்து முத்து மாலையை சிதறவிட்டது இந்தியா. அதற்கு பின்பு அவர்களின் இன்னொரு கனவு திட்டமான பட்டு பாதையை நிறுத்தியது மோடி சர்க்கார்.

மேலும் இந்த கொரானா விவகாரத்தில் உலகநாடுகளில் சீனாவை தள்ளி வைத்துள்ளதும், அங்கு முதலீடு செய்த கம்பெனிகள் வேறு ஒரு நாட்டை நோக்கி நகர்வதும் அங்கு சூழ்நிலையை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சீனாவில் பொருளாதார நிலையும் கீழே சென்று கொண்டுள்ளது இதையெல்லாம் எப்படி சரி செய்வது அதற்கு,ஏதாவது ஒரு சப்பை கட்டு கட்ட வேண்டுமல்லவா அதற்குத்தான் சீனா கையில் எடுத்த விவகாரம் இந்தியாவை சீண்டிப் பார்ப்பது .

இந்திய சீன எல்லையான லடாக் அருகே தன்னுடைய படைகளை விரைவாக அனுப்பி நிலைமையை வேகமாக பரபரப்புக்கு உள்ளாக்கியது சீனா . அனைத்தையும் வேடிக்கை மட்டும் பார்க்கவில்லை மோடி அரசு , சரியான நடவடிக்கை எடுத்தது.

அது மட்டுமில்லமால் இந்தியாவுக்கு அதிகப்படியாக இராணுவ ஹெலிகாப்டர்கள் தேவைப்படுவதால், தான் உபயோகித்து வரும் ஹெலிகாப்டர்களை அமெரிக்கா இந்தியாவுக்கு கொடுத்துள்ளது. இந்தியா ஆர்டர் செய்திருக்கும் ஹெலிகாப்டர்கள் வந்ததும், இந்த ஹெலிகாப்டர்கள் திருப்பி அனுப்பபடும்.

ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் இரு நாட்டு துறைமுகங்களை இராணுவ / கடற்படை தேவைகளுக்காக உபயோகித்துக் கொள்ள ஒப்பந்தம். ஆஸ்திரேலியாவில் இந்திய கடற்படை கப்பலும், இந்தியாவில் ஆஸ்திரேலிய கடற்படை கப்பலும் விரைவில் நம்முடன் கைகோர்க்கிறது.

மேலும் இந்தியா படைகளை குவித்த வண்ணம் இருப்பதால் செய்வதறியாமல் தற்போது திகைதுள்ளது சீனா யாரவது இது குறித்து பேசுவார்கள் அப்போது சமாளித்து பின்வாங்கலாம் என்றிருந்த நிலையில் எல்லை பகுதியில் நடந்த தாக்குதலில் சீனாவிற்கே அதிக சேதம் ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், பேச்சுவார்த்தை மூலமாக லடாக் விவாகரத்தை முடிவுக்கு கொண்டுவரலாம் என இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. சீன தரப்பில் சேதங்கள் அதிகம். இந்த நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படைகளையும் தயாராக இருங்கள் என கூறினார்.

இந்த நிலையில் சீனா தீடிரென வெள்ளை கொடி காட்ட ஆரம்பித்துள்ளது எல்லைப் பிரச்னைக்காக இந்தியாவுடன் மேலும் சண்டையிட விரும்பில்லை என்றும் பிரச்னையை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியான் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், பேச்சுவார்த்தை மூலமாக லடாக் விவாகரத்தை முடிவுக்கு கொண்டுவரலாம் என இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. சீன தரப்பில் சேதங்கள் அதிகம். இந்த நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படைகளையும் தயாராக இருங்கள் என கூறினார்.

இந்த நிலையில் சீனா தீடிரென வெள்ளை கொடி காட்ட ஆரம்பித்துள்ளது எல்லைப் பிரச்னைக்காக இந்தியாவுடன் மேலும் சண்டையிட விரும்பில்லை என்றும் பிரச்னையை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியான் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தாலும் சீனாவிற்கு பாடம் புகட்ட இந்தியா தயாராக உள்ளது. அதுமட்டுமில்லமல் இதை உலக நாடுகள் எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கிறது என்பது சீனாவிற்கு தெரிந்த ஒன்று. இதற்கு மேல் சீனா தீவிர தாக்குதல் நடத்தினால் அவர்களுக்குத்தான் சேதம் என்பது நிதர்சனம்!

Exit mobile version