மத்திய அரசின் ஏழை விவசாயிகள் திட்டத்தில் கை வைத்த #தமிழன்டா.
கடந்த 2018-ஆம் ஆண்டு பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6000 நிதி உதவி, 2000 ரூபாய் என மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.பிரதமரின் கிஷான் திட்டத்தில் சேர நீங்க விவசாயியாக இருப்பது கட்டாயம்..ஆனா தமிழகம் முழுவதும் ஆதார் விவரம், அடையாள அட்டை ஆகியவற்றை இடைத்தரகர்களிடம் யார் தந்தாலும் போதும் முதல் தவணையாக ரூபாய் 2 ஆயிரம் உடனே வந்து சேரும்..ஒவ்வொருவரிடமும் கமிஷன் தொகையாக தலா ஆயிரம் ரூபாயை இடைத் தரகர்கள் பெற்றுள்ளனர்
பிரதமரின் கிசான் திட்டத்தில் இவர்கள் எல்லாம் சட்டவிரோதப் பயனாளிகள் விவசாயிகளோ அல்லது விவசாயக் கூலித் தொழிலாளர்களோ இல்லாமல் இருந்தாலும், அவர்களுக்கு விவசாயிகளுக்கான உதவித் தொகை கிடைத்திருக்கிறது.விவசாயத்துறையை சாராதவர்களின் ஆவணங்களை வாங்கி, வங்கியில் போலி கணக்கு தொடங்கி, பிரதமரின் கிசான் திட்டத்தில் கமிஷன் பெறும் மோசடி தமிழகம் முழுவதுமே நடைபெற்றுக் கொண்டிருந்தது..இதன் பின்னணியில் பெரும் கும்பல் செயல்படுகிறது என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.
கடலூரில் மட்டும் இதுபோன்று 38 ஆயிரம் போலி கணக்குகளை தொடங்கி அதிகாரிகள் மோசடி செய்துள்ளது, வங்கிக் கணக்கு ஆய்வின்போது அம்பலமாகியுள்ளது.இந்த மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட 40 ஆயிரம் பயனாளிகளில் 4 ஆயிரம் பேர் மட்டுமே உண்மையான பயனாளிகள் என்பது கூடுதல் அதிர்ச்சி தகவல்..
வேளாண் இணை இயக்குநர் வேலாயுதம் அளித்த புகாரின் பெயரில் சிபிசிஜடி விசாரணையில் போலி பயனாளிகளின் வங்கிக் கணக்கிலிருந்து 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இப்போது 4கோடி பணம் திரும்ப பெற்று வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது..பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற, மத்திய அரசு பல நிபந்தனைகளை விதித்தது. உண்மையான விவசாயிகளே அத்துனை ஆவணங்களையும் சமர்ப்பிக்க சற்று திணறும் நிலைமையே ஏற்பட்டது. அப்படியிருக்க, விவசாயிகள் அல்லாதோர் வங்கிகளில் எப்படி போலி கணக்கு தொடங்கினார்கள்?ஆனா இது சிக்கியுள்ளது முதலையின் நுனி வால் தான்… விவசாயி தான் எல்லாம் என போராளிகள் முதல் நடிகர்கள் வரை சொல்வோர் தற்போது எங்கே சென்றார்கள் என தெரியவில்லை!
தமிழகம் முழுவதும் இந்த முறைகேடு நடைபெற்றுள்ளது..விரிவான விசாரணை வேண்டும்…