தலைநகர் தில்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறைகள் மற்றும் செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றி சம்பவம், உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது. நாட்டை அவமானப்படுத்தும் வகையிலான இந்த சம்பவத்திற்குப் பிறகு, செங்கோட்டையில் ஏராளமான பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் பேசும் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. உழவர் தலைவர் ராகேஷ் டிக்கைட் விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது வன்முறையை தூண்டும் வகையில் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது, அதில் அவர் ‘பேரணிக்கு லத்திகளைக் கொண்டு வாருங்கள்’ மேலும் கொடியை என வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.
நேற்று நடந்த வன்முறையில் டெல்லி காவல்துறையின் 300 போலீசார் காயமடைந்துள்ளதாகவும், இதுவரை 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரத் கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகெத் ஜனவரி 26 ம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறைகளுக்குப் பின்னர் ஊடகங்களுடன் பேசிய போது, வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும் விவசாய சங்கத்திற்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று தில்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து டெல்லியில் மெட்ரோ ரயில் போக்குவரத்தில் பெரும்பாலான வழித்தடங்கள் நிறுத்தப்பட்டது. தில்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து ஹரியானா, தில்லி எல்லை பகுதிகளான சிங்கு, காஜிப்பூர், திக்ரி, முகார்பா சவுக், நாங்லோய், ஆகிய பகுதிகளில் இன்டர்நெட் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















