இஸ்லாமிய இட இதுக்கீடு முதல் வேலைவாய்ப்பு வரை பெற்றுகொள்கின்றார்கள், இஸ்லாமிய சலுகை முதல் இஸ்லாம் பண்டிகை கொண்டாட்டம் வரை இந்நாடு முறையாக வழங்குகின்றது…
வாக்கு முதல் ரேஷன் கார்டு வரை இந்நாட்டில் இஸ்லாமியருக்கு பாரபட்சம் என்ன?
கல்வி முதல் பாஸ்போர்ட் வரை அவர்கள் முறையாக வாங்குகின்றார்கள்…
இஸ்லாம் என்பதால் இத்தேசம் எதில் அவர்களை விலக்கிற்று?
ராணுவம் முதல் கிரிக்கெட் வரை அவர்களை எங்கே ஒதுக்கிற்று?
திறமையும் நாட்டுபற்றுமுள்ள இஸ்லாமியன், கிரிக்கெட் முதல் தேசம் வரை ஜனாதிபதியாகலாம்……
அப்படிபட்ட தேசம் ,
இன்றும் இஸ்லாமியருக்கு எல்லா சலுகைகளும் வழங்கும் தேசம்,
எப்படி தங்களை குடியுரிமை சட்டத்தை காட்டி வெளியே தள்ளும், அல்லது தள்ளமுடியும் என நம்புகின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை
ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், இந்த அருமை தேசத்தை மதத்தின் பெயரால் பிளந்துதான் பாகிஸ்தானையும் வங்கதேசத்தையும் இஸ்லாமிய பூமி என உருவாக்கினார்கள்..
இன்று அந்த இஸ்லாமிய பூமிக்கு செல்ல அஞ்சுகின்றார்கள்..
ஆக மதத்தின் பெயரால் பிரிந்து சென்ற கூட்டத்தின் நடுவில், தரித்திரர்களான அவர்கள் நடுவில் இவர்கள் வாழ விரும்பவில்லை அஞ்சுகின்றார்கள்..
அந்நிலையிலாவது இத்தேசம் என்னை வாழவைக்கின்றது எனும் எண்ணம் வேண்டாமா?
இந்த தேசம் அமைதியாய் இருக்கட்டும் எனும் நன்றி வேண்டாமா?
அரசு உறுதியாய் சொல்கின்றது…
வடகிழக்கு மாநிலங்களை தவிர இந்த சட்டத்தை வேறெங்கும் பிரயோகிக்கும் எண்ணமில்லை அதற்கு அவசியமுமில்லை என்றபின்பும் இந்த போராட்டம் ஏன்?
எல்லாம் வெறும் வீம்புக்கும், வம்புக்கும் நடக்கும் போராட்டம்…
தங்கள் மதத்தின் பெயரால் பிரிந்து சென்ற நாடுகள் தரித்திர கோலத்தில் இருப்பது கண்ட விரக்தி ஒருபுறம், அங்கு விரட்டிவிடுவார்களோ எனும் அச்சம் ஒருபுறம்..
ஆக இந்த பொன்னான நாட்டில் இந்தியராக இருந்துவிட துடிக்கின்றார்கள் நல்லது,
ஆனால் அதை வன்முறை நாடாக்கி அந்த தரித்திர நாடுகளை போல ஆக்கிவிட்டு ஒரு சமநிலையினை உருவாக்கி பிரிந்து சென்றாலும் உருப்படமாட்டோம், இங்கு வாழவிட்டால் உங்களையும் உருப்படாமல் ஆக்குவோம் என ஒருமாதிரி திரிவதெல்லாம் சரியல்ல
கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் ஸ்டான்லி ராஜன்.