மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த வாரம் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், லக்னோவில் நடந்தது. இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வருவது குறித்து விவாதம் செய்யப்பட்டது.பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என எதிர்கட்சியாக இருந்த போது திமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன், இந்த ஜிஎஸ்டி (GST) கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து சமூக வலைதளத்தில் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.
அதற்கு அவர் தரப்பில் விளக்கப்பட்ட காரணத்தில், ஜிஎஸ்டி கூட்டத்திற்கு, தனக்கு தாமதமாக அழைப்பு வந்ததால், போக இயலவில்லை என்றும், மேலும் ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வருவதாக உறுதி அளித்திருந்ததாகவும் அவர் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூறினார்.இதற்கு, சமூக வலைதளங்களில் கடுமையான விமர்னங்கள் எழுந்தன. மக்கள் நலனை விட தனிப்பட்ட நிகழ்ச்சிக்கு தான் அமைச்சர் முக்கியத்துவம் கொடுக்கிறாரா என்ற வகையில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.இந்நிலையில், இன்று பதிவிட்ட தனது ட்விட்டர் பதிவில், எனக்கு கொழுந்தியாளே இல்லை என ஜிஎஸ்டி கூட்டம் தில்லியில் அல்ல லக்னோவில் நடந்தது என்றும் கூறியுள்ளார்.
இருப்பினும், கொளுந்தியா இல்லை என்றாலும், வேறு ஒருவரின் வளைக்காப்பு நிகழ்ச்சிக்கு போவதாக செய்தியாளர் கூட்டத்தில் கூறிய நிலையில், தனிப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள, மக்கள் நலனை புறக்கணித்து ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொள்ளாதது சரியா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், அதில் அவர் நாகரீகமான முறையில் விமர்சனம் செய்யாமல், அநாகரீகமான முறையில் வார்த்தைகளை பிரயோகித்திருப்பது குறித்தும், விமர்சனங்கள் எழுந்துள்ளன.
எவ்வளவு பெரிய பரம்பரையிலிருந்து ஒருவன் வந்தவனாக இருந்தாலும் பல மேலை நாடுகளிலும் படித்து பட்டங்கள் பல பெற்று நுனிநாக்கு ஆங்கிலம் பேசினாலும் திராவிட கொள்கையை பின்பற்றும் ஒருவனிடம் நாகரிகம் இருக்காது என்பதற்கு இன்றைய தமிழக நிதி அமைச்சர் ஒரு உதாரணம்.திராவிட கொள்கையை பின்பற்றும் ஒருவனை அது நாகரிகமாக பேச பழக பக்குவபடுத்துவதில்லை என்பதை நாம் தினம் தினம் பல டிவி விவாதங்களிலும் பலரையும் நேரில் பார்த்து வருகிறோம்.
தமிழக கலாசாரம் பண்பாடு உலகில் தலைசிறந்ததாக பெரியார் பிறக்கும் முன்பு வரை தொடர்ந்து இருந்துள்ளது.இந்த சனியன் பிடித்த பெரியார், அண்ணா, கருணாநிதி என்று தொடர்ந்து இன்றைய ஸ்டாலின் என நம் நல்ல கலாச்சாரத்தையே அழித்து ஒழித்து இன்றைய நம் சந்ததியினரையும் வருங்கால நமது சந்ததிகளையும் ஒருதவரான வழிக்கு அழைத்து சென்று விட்டனர்.இதற்கு என்று விடிவுகாலம் கிடைக்குமோ?