கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் தமிழகத்தில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்துள்ளார். கமல் என்ற மிகப்பெரிய பிம்பத்தை வீழ்த்தியதற்கு காரணம் . கோவையில் மக்களோடு மக்களாக கலந்து அவர்களிடம் பேசி பழகி அவர்களின் குறைகளையும் கேட்டு அதற்கான நிவர்த்தி செய்யும் பணியையும் மேற்கொண்டு வந்தது தான் . கோவையில் 5 நாட்கள் தாகம் தீர்க்கும் தாமரை யாத்திரை நடத்தி பல குளங்களை தூர்வாரினார் இது கோவையில் பெரிதும் பேசப்பட்டது. இதன்பின் தமிழகமெங்கும் குளங்கள் தூர் வரப்பட்டது. இதற்கு முன்னுதாரணம். வானதி சீனிவாசனின் தாகம் தாமரை யாத்திரை தான் காரணம்.
மேலும் இவர் உப்பிலிபாளையம் எனும் கிராமத்தைத் தத்தெடுத்து நூலகம் முதல் குளங்கள் வரை அனைத்தையும் பராமரித்து வருகிறார் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் கோவை மக்கள் சேவை மையம் மூலம் மக்களுக்கு பிரதமர் மோடியின் திட்டங்களை நேரடியாக சென்று சேர்க்கிறார் பூக்கடை முதல் பெரிய தொழிற்சாலைகள் வரை இவரின் சேவை பாராட்டைப் பெற்றுள்ளது. இவர் சிறு வயதிலிருந்தே ஏபிவிபியில் தன்னை அர்ப்பணித்து மக்களுக்கு சேவை செய்து வந்தார். அதன் பின் சிறு சிறு பொறுப்புகளாக முன்னேறி தற்போது பாஜக தேசிய மகளிரணி தலைவராக உள்ளார்.
இவர் கடந்த வாரம் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நாடு முழுதுவம் பா.ஜ.க வின் மகளிர் அணியை பலப்படுத்துவதில் ஓய்வில்லாமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல கூட்டங்களை நடத்தி வருகிறார். ஒருபக்கம் மகளிர் அணி தலைவி மறுபக்கம் சட்டமன்ற உறுப்பினர் பணி என இரண்டு பணியினையும் செவ்வெனே செய்து வருகிறார். வானதி சீனிவாசன். தமிழகத்தில் கொரோனா இரணடாம் கட்ட அலையில் தொற்று உச்சத்தில் இருந்த போது தனது கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியை விட்டு எங்கும் செல்லாமல் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் உள்ள குறைபாடுகளையும் ஆக்ஸிஜன் தேவையையும் மத்திய அரசுக்கு எடுத்து கூறி நிவர்த்தி செய்தார் வானதி சீனிவாசன். மேலும் தொகுதி மக்களுக்கு உதவி பொருட்கள் நிவாரண பொருட்கள் என மக்கள் சேவையினை தொடந்தார். நாடு முழுவதும் மகளிர் அணியின் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்ய உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பீகார் பாட்னாவில் பாஜக மகளிர் அணி மாநில செயற்குழு நடந்தது.கூட்டத்திற்கு தலைமை தாங்க பீகார் பட்னாவிற்கு பறந்தார் வானதி . பாட்னாவில் இருக்கும்போது அவரின் தொலைபேசிக்கு கோவை தெற்கு தொகுதியின் 85 வது வார்டு மின்கம்பம் பழுது அடைந்து சாய்ந்து இருப்பதாக புகார் வந்ததுள்ளது. பாட்னாவில் இருந்துகொண்டே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் குறித்து பேசியுள்ளார் வானதி சீனிவாசன் அவர்கள். உடனடியாக பழைய மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் மாற்றப்பட்டது. எங்கிருந்தாலும் மக்கள் சேவைக்கு முக்கியத்துவம் தருகிறார் கொங்கு தமிழச்சி வானதி சீனிவாசன் அவர்கள்.
https://www.facebook.com/376724935746446/posts/4149625178456384/
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















