தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் மின்வாரியத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தமிழகத்தில் மின் தட்டுப்பாடு அங்கங்கே தொடங்கி உள்ளது. தமிழகத்தில் நிலக்கரி அளவும் 2 நாட்கள் தான் உள்ளது.
இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது : திமுக அரசு மின்சாரத்தை அதிகமான விலைக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. மின்சாரம் ஒரு யூனிட் விலை 20 ரூபாய்க்கு வாங்க திட்டமிட்டுள்ளது. இது நான்கு மடங்கு அதிகம். திமுக அரசு வாங்க போகும் நிறுவனம் திமுகவினர் கையகப்படத்தப்போகும் நிறுவனம் . இதன் மேலும் இந்த டெண்டர் 4000 கோடி முதல் 5000 கோடி வரை டெண்டர் விட முடிவு செய்துள்ளதாகவும் இந்த டெண்டர் மூலம் திமுகவுக்கு கோடிக்கணக்கான ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் தமிழக மக்கள் மீது நிதிச்சுமை அதிகரிப்பது மட்டுமின்றி மின்சாரத்துறைக்கும் பேரிழப்பு ஏற்படும் எனக் கூறியிருந்தார்
இந்த செய்தி தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் திமுக அரசு பதவியேற்று 6 மாதம் காலம் தான் ஆகிறது அதற்குள் ஒரு எம்.பி கொலை குற்ற வழக்கில் சிறையில் உள்ளார். தற்போது ஊழல் குற்றச்சாட்டு என வரிசையாக சிக்கலில் மாட்டி கொண்டு வருகிறது.
மேலும் அண்ணாமலை கூறிய ஊழல் குற்றச்சாட்டு பற்றி எந்த ஊடகமும் வாய்திறக்கவில்லை. அதனால் இது பெரும் மக்களிடையே திமுகவின் ஊழல் பற்றி மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. அனைத்து ஊடகங்களும் திமுகவின் கைபாவையாக செயல்படுகிறது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
இந்த நிலையில் திமுக அமைச்சர் மின்சாரத்துறையில் ஊழல் நடைபெறும் ஆதாரத்தை அண்ணாமலை வெளியிட வேண்டும் என வீர வசனம் பேசினார். இதனை தொடர்ந்து சவால் விட்ட அரை மணி நேரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஊழல் ஆதாரத்தை வெளியிட்டுள்ளார் இந்த சம்பவம் தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது
அண்ணாமலை வெளியிட்ட ஆதாரத்தில் :
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் (டிடிபிஎஸ்) ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த பல மாதங்களாக பணம் வழங்கப்படவில்லை. 4% கமிஷனை எடுத்துக் கொண்ட பிறகு சமீபத்திய நாட்களில் திடீரென்று INR 29.64 கோடி பணம் செலுத்தப்பட்டது. ஏன் பதில் சொல்லுங்கள் பாலாஜி!
இந்த வாரம் தூத்துகுடி அனல்மின் அடுத்த வரம் சோலார் கம்பெனிக்கு அதற்கடுத்த வாரம் மிகப்பெரிய கம்பெனிக்கு என சொல்லி முடித்துள்ளார். திமுக அரசு பதவியேற்ற குறைந்த மாதங்களிலேயே ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிப்படையாக தெரியவந்துள்ள சம்பவம் தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்பட்டுள்ளது.