பஞ்சாப் அரியானா விவசாயிகள் ஏன் போராடறாங்க?
இத்தனை டிராக்டரில் ஆறு மாத உணவுப் பொருளுடன் வந்து தலைநகரை முற்றுகை இடுவதற்கு அந்த மாநில அரசு மற்றும் அரசியல் கட்சிகள் ஏன் உதவுகிறது.
இதை பற்றி பிரபல அரசியல் விமர்சகர் பகவான் என்ற பகவான் அற்புதராஜ் கூறுகிறார்.
- இரண்டு மாநிலங்களிலும் நெல் மற்றும் கோதுமை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் APMC மண்டியில் தான் நடக்க வேண்டும்.
- அங்கு நடக்கும் விற்பனையில் அரசுக்கு #பஞ்சாப் 8.5% வரியும், #அரியானா 6.5% வரியும் வசூலிக்கிறது.
- இந்த வரி இனிமேல் மாநிலத்திற்கு வராது!! வரிஇயன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? பஞ்சாப் ₹.1750 கோடி; அரியாணா ₹.850 கோடி. இத்தனை வருவாய் இழப்பை மாநிலம் சந்திக்கும் – மண்டிகளுக்கு கட்டாய விற்பனை நின்றால்.
- அதனால் அரசுகளே இந்த போராட்டத்தை நடத்துகிறது.
- இந்த பிரச்னையின் மற்றொரு கோணம் என்ன தெரியுமா? மத்திய அரசின் சப்ஸிடி எனும் மானியத்திற்கான தொகை அதிகரிக்கிறது இந்த வரிகளினால்.
- மோடி அரசு வரும் சீசனில் கொண்டு வந்துள்ள புதிய சட்டங்கள் மூலம் பஞ்சாப் / அரியானா அரசுகளுக்கு வரி தராமல் FCI மூலம் MSP விலைக்கு கொள்முதல் செய்ய உத்திரவிட்டுள்ளார்.
- அடுத்து இந்த மண்டியில் யார் உணவு தானியங்களை வாங்குகிறார்கள் என்றால் பார்த்தால் அவர்களும் இந்த சட்டத்தை எதிர்க்கிறார்கள்.
- மண்டியில் கொழுத்த ஊழல் நடப்பதால் விவசாயிகளுக்கு லாபம் இல்லாது, இடைத்தரகர் சம்பாதிக்கிறார்கள். அது நிறுத்தப்படும்.
- எனவே அரசு, இடைத்தரகர் இரண்டு லாபிகளும் சேர்ந்து இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள். அதில் இசுலாமிய PFI & SDPI, மற்றும் சீக்கிய தீவிரவாத SFC (Canada) ,ஆகியனவும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கிறார்கள்.
- இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் – தமிழகம் உட்பட இந்த சட்டங்கள் படிப்படியாக அமலுக்கு வந்தாயிற்று.
- இன்னும் கேரளா, பீகாரில் APMC அமைப்பே கிடையாது.
அதனால் மற்ற மாநில விவசாயிகள் இந்த போராட்டத்தை குழப்பமாக பார்க்கிறார்கள்.