நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கொரோனா பரவுவதலை தடுக்க மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது . தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறி புள்ளிங்க மற்றும் காதலர்கள் தம்பிகள் சாலையில் நகர்வலம் வருகின்றார்கள். காவல்துறை பார்த்துவிட்டது. ஆனால் அடங்குவதாக தெரியவில்லை.
இந்த நிலையில் கொரோனா நோய்க் கிருமியை கட்டுப்படுத்தும் பணியை விட அரசாங்கம் மற்றும் காவல்துறைக்கு அடங்க மறுத்து அத்துமீறும், தம்பிகளை சமாளிப்பது காவல்துறையினருக்கு சற்று சவாலான பணியாக உள்ளது .
நெடு ஊரடங்கை மதிக்காமல் ஊர் சுற்றிய தம்பியை காவல் துறை எதற்காக ஊர் சுற்றுகிறாய் என்ற ஒரு கேள்வி கேட்டதற்கு அந்த தம்பி என் ஊர் என்னோட கோட்டை இப்படித்தான் சுற்றுவேன், உத்தரவு போட்ட முதலமைச்சரை வரசொல் என்றுகாவல்துறையிடம் நெஞ்சு நிமிர்த்தி சாவல் விட்ட இந்த தம்பி
அடுத்து நடக்க இருக்கும் காவல்துறையின் சம்பவத்தை யோசிக்காமல் சீமான் போல் பேசிவிட்டார். அடுத்த சம்பவம் காவல்துறை நடத்திய தரமான சம்பவம். காவல் அந்த தம்பியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று முட்டி போட வைத்து விசாரித்த விதம் வேற லெவல்
கட்சி மேடைகளில் யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம், கையை நீட்டி குரலை உயர்த்தி என்ன வேண்டுமானாலும் பேசலாம், சம்பந்தப்பட்ட கட்சியினரை தவிர யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆனால் நாடு முழுவதும் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்தில், கை உயர்த்தி குரலை உயர்த்தி உடம்பை முறுக்கினால், இப்படி சில அடிகள் விழத்தான் செய்யும்..!
ஊரில் எல்லா கடைகள்கடைகளும் மூடிருக்க, செருப்பு வாங்க போவதாக விளக்கம் அளித்த டிப்ளமோ என்ஜீனியரான தம்பி, முககவசம் உள்ளிட்ட எந்த ஒரு முன் எச்சரிக்கையையும் பின்பற்றாமல் இரு சக்கர வாகனத்தில் ஊருக்குள் சுற்றியதோடு, அதை கண்டித்த பெண் போலீசாரிடம் வீதியில் நின்று, வீம்புக்கு உலக அரசியல் தொடங்கி, உள்ளூர் அரசியல் வரை முழங்கியதால், மண்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டார்!
பொதுவாக அரசியல் மேடையில் பேசுவோர் தப்பிவிட வாய்ப்புண்டு, இணையத்தில் போலி கணக்கில் இது போல இஷ்டத்துக்கு பேசிவிட்டு தப்பிவிடலாம்..! ஆனால் இப்படி வீதியில் நின்று வீம்புக்கு பேசும் தம்பிகள் போலீசிடம் இருந்து தப்பிக்க வாய்பே இல்லை என்பதை உணரவேண்டும்.!
ஏனெனில் கொரோனாவுக்கு போராளி என்றெல்லாம் பிரித்துப்பார்க்க தெரியாது..! தம்பிகள் உலகம்… தனி உலகம் என்றாலும் வீட்டிலேயே இருங்கள், கொரோனா குறித்த விழிப்புணர்வுடன், கொஞ்சம் அடங்கியே இருங்கள்.!