Sunday, March 15, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

உதயநிதி குறித்த கேள்வி … இறங்கி அடித்த வானதி ..கோவிலை இடித்துதான் பாபர்மசூதி கட்டப்பட்டது.. பட்டாசு போல் வெடித்த பதில்கள்

Oredesam by Oredesam
January 18, 2024
in செய்திகள்
0
Vanathi Srinivasan

Vanathi Srinivasan

FacebookTwitterWhatsappTelegram

கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அயோத்தியில் கோவிலை இடித்துவிட்டுதான் பாபர் மசூதியே கட்டப்பட்டது எனக் கூறிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தரமான பதிலை கொடுத்துள்ளார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சனாதன தர்மத்தின் ஒரு பகுதிதான் ஜல்லிக்கட்டு கூறினார்.

வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியது : அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான பூஜைகள் துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் செவ்வாய்கிழமை ராமர் விக்ரஹத்தின் பிராணப்பிரதிஷ்டை நடைபெற உள்ளது. இந்நிலையில், அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கோவில்களில் தூய்மை இயக்கம் மேற்கொள்ளப் பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

இதனை தொடர்ந்து கோவையில் புகழ்பெற்ற கோனியம்மன் திருக்கோவிலுக்கு சென்ற பாஜக எம்.ல்.ஏ வானதி சீனிவாசன் ஆலயத்தினில் தூய்மை பணியினை மேற்கொண்டார் அதைத்தொடர்ந்து, அவர் சுவாமி தரிசனமும் செய்து வழிபட்டார் பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “வருகின்ற ஜனவரி 22 ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதற்கான அட்சதை, அழைப்பிதழ்கள் கோடிக்கணக்கான வீடுகளுக்கு சென்று வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. அவற்றை ராமர் வந்ததை போல மக்கள் பக்தி பரவசத்துடன் பெற்று கொண்டு, ராமர் கோவிலுக்கு வர சங்கல்பம் எடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் கோவில்களை தூய்மைப்படுத்தும் பணிகளில் பா.ஜ.கவினர் ஈடுபடுத்தி கொண்டுள்ளனர். கும்பாபிஹேக நாளான்று வீடுகளில் 5 தீபங்கள் ஏற்ற வேண்டும் என மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை மக்கள் விழா போல கொண்டாட உள்ளனர். நாடு முழுவதும் ஆன்மிக பேரலை எழுந்துள்ளது. அடிமை சின்னத்தை மாற்றி கலாச்சார நாயகனுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடக்கும் பொன்நாள் பாரத வரலாற்றின் திருநாள். அதனை நாடு கொண்டாட தயாராகி வருகிறது.

சென்னையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா குறித்த கேள்விக்கு பதிலளித்தஉதயநிதி ஸ்டாலின், அயோத்திராமர் கோயில் திறப்பதற்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துவிட்டு கோவில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்றார் இதுகுறித்த கேள்விக்கு

பதிலளித்த வானதி சீனிவாசன் மசூதி கோவிலை இடித்து தான் கட்டப்பட்டு இருந்தது.இதை உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. நியாயப்படி அந்த இடத்தை உரிமையாளரிடம் தான் ஒப்படைக்க வேண்டும். அது தான் நடந்துள்ளது. முதலமைச்சர் ராமர் கோயில் அழைப்பிதழை நேரில் வாங்கவில்லை. ஆனால் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அழைப்பிதழை வாங்கி, அயோத்திக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார். தகப்பனார் அரசியல் வேறு. மனைவி அரசியல் வேறு. மகன் அரசியல் வேறு என வேறு வேறு அரசியல் வழியில் செல்கின்றனர். ராமர் கோவிலுக்கு ஒவ்வொருவரையும் அழைக்கிறோம். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு வாழ்த்து சொல்வது போல ராமர் பக்தர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்.

காவி திருவள்ளுவர் குறித்த கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன் : திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சமய அடையாளம் இல்லாத திருவள்ளுவர் வரையப்பட்டது.பல்வேறு ஆன்மிக மடங்களில் சமய அடையாளம் உள்ள திருவள்ளுவர் படம் உள்ளது. அதனை தான் பாஜக எடுத்து பயன்படுத்துகிறது. திருவள்ளுவர் சமய‌ சார்பற்றவர் என்றால், திருக்குறளில் எத்தனை இடங்களில் விஷ்ணு, லட்சுமி பற்றி வந்துள்ளது தெரியவில்லையா? திருக்குறளை அவர்கள் ஒழுங்காக படிக்கவில்லையா? தமிழகத்தில் தாமரை மலர்ந்து 4 பேர் சட்டமன்றத்தில் இருக்கிறோம். ஒவ்வொரு கட்சியும் ஆளுங்கட்சியாக வருவதை லட்சியமாக கொண்டுள்ளன. நாங்கள் எங்கள் கட்சியல வளர்க்க வேலை செய்கிறோம்.

ஜல்லிக்கட்டு குறித்த கேள்விகளுக்கு பதில் : ஜல்லிக்கட்டு மஞ்சள் விரட்டு அனைத்தும் கோவிலோடு தொடர்புடையது. அதனை சு.வெங்கடேசனால் மறுக்க முடியாது. சாமி கும்பிடாமல் காளைகளை அவிழ்த்து விடுவதில்லை. மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து கலாச்சாரத்தை சீரழிப்பதை திமுக, கம்யூனிஸ்ட்கள் வேலையாக கொண்டுள்ளனர். கோவிலில் இருந்து ஜல்லிக்கட்டை பிரிக்க பார்ப்பது முட்டாள்தனம்.

ஜல்லிக்கட்டு சனதான தர்மத்தின் ஒரு பகுதி. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் சீர்திருத்தத்தின் அடுத்த கட்டம். அடிக்கடி தேர்தல் வருவதால் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியாது. அமைச்சர்களின் நேரம் தேர்தலில் செலவாகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தலை திமுக மறுப்பது சரியாக வராது‌. எப்படி ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது என கருத்துகளை சொல்லுங்கள். விவாதிப்போம். அரசியலமைப்பு சட்ட அதிகாரப் படி ஆளுநர் வேலை செய்கிறார். அனைத்து மக்களும் சமமாக பாதுகாக்கப்பட வேண்டும். மக்களின் மதம், நம்பிக்கையை காப்பாற்றும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அரசு அனைத்து மதங்களையும் சமமாக பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு

சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு

May 24, 2023
ஆப்கானிஸ்தானில் திடீர் திருப்பம் 3 மாவட்டங்களில் தாலிபான்களை விரட்டிய கிளர்ச்சியாளர்கள்! அச்சத்தில் தலிபான்!

ஆப்கானிஸ்தானில் திடீர் திருப்பம் 3 மாவட்டங்களில் தாலிபான்களை விரட்டிய கிளர்ச்சியாளர்கள்! அச்சத்தில் தலிபான்!

August 23, 2021
ஜனவரி 26 குடியரசு தினம் சுதந்திர தினமல்ல! ஸ்டாலினை பங்கம் செய்த அண்ணாமலை! விடியல் அரசுக்கு அறிவுரை!

மரியாதை என்றால் என்ன என்றே திமுகவினருக்கு தெரியாது-அண்ணாமலை ஆவேசம்…

July 13, 2022
மத்திய அரசு விநாயகர் சதுர்த்தியன்று தமிழக வினை தீர்க்க ஒரு அதிரடி நடவடிக்கை.

மீண்டும் சம்பவத்திற்கு தயாரான ஆளுநர் ? பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பின் பின்னணி இதுதானாம்..

December 24, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x