கொரோனா காரணமாக நாடு முழுவதும் கடந்த 50 நாட்களுக்கு மேல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடித்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஊரடங்கு பல தளர்வுகளுடன் மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர் அவரவர் சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் உள்ளனர் .
மத்திய அரசு இதற்கென தனி சிறப்பு ரயில்கள் இயக்கி புலம் பெயர் தொழிலார்களை அவரவர் சொந்த ஊருக்கு அனுப்ப படுகிறார்கள். சில தொழிலாளர்கள் சைக்கிள் மற்றும் நடந்தும் சென்ற வண்ணம் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் டில்லியில் இருந்து சொந்த மாநிலம் திரும்பிய வெளிமாநிலத் தொழிலாளர்களை, காங்கிரஸ் முன்னாள் தலைவர், ராகுல் காந்தி நேற்று முன்தினம் சாலையில் சந்தித்தார். சாலையோரங்களில் அமர்ந்து, அவர்களிடம் நலம் விசாரித்தார். நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இது குறித்த கேள்விக்கு, நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
ராகுல் காந்தி சாலையில் அமர்ந்து பேசி, அவர்களுடைய நேரத்தை வீணடித்துள்ளார். அதற்கு பதிலாக, அவர்களுடைய சூட்கேஸ்களை சுமந்து சென்று உதவியிருக்கலாம். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கு, தேவையான உதவி செய்ய, அந்த மாநில அரசுகளை, அவர் கேட்டுக் கொள்ளலாம். இது வெறும் அரசியல் நாடகம் தான்
இந்த இக்கட்டான நேரத்தில், இதுபோன்ற சில்லரைத்தனமாக விஷயங்களில் ஈடுபடுவதைவிட்டு, பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் தலைவர், சோனியாவிடம் இதை கோரிக்கையாக வைக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.