கொட்டும் மழையிலும் வீடு வீடாக சென்று ஏழைகளுக்கு உணவளிக்கும் தமிழக பாஜகவின் இளைஞரணி தலைவர் …

கையில் குடையைப் பிடித்து, வீடு வீடாக சென்று ஏழைகளுக்கு உணவளிக்கும் தமிழக பாஜகவின் இளைஞரணி தலைவர் …

புயல் கரையைக் கடக்க உள்ளது. மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் காற்றடிக்கும்.  பலத்த அல்லது மிக பலத்த மழை பெய்யும். மக்கள் வீடுகளிலேயே ஒடுங்கி இருக்கும் நேரம் இது.  ஆனால் பொதுவாழ்வில் இருக்கும் ஒரு சிலருக்கு மட்டும் ஓய்வில்லை.

 தேசபக்தனுக்கு ஓய்வு ஏது?   உணவில்லாமல் பலர் தவிக்கும்போது தன்னுடைய வசதி, தன்னுடைய பாதுகாப்பு அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.புயலினால் ஏற்படும் சேதங்களிலிருந்து பொதுமக்களை, குறிப்பாக ஏழை மக்களை காப்பாற்றுவதற்காக பல நல்ல உள்ளங்கள் தமிழகமெங்கும் களமிறங்கியுள்ளனர். 

தங்கள் சொந்த பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாமல், மழையில் நனைந்த வண்ணம், சேவா பாரதி மற்றும் பாஜக தொண்டர்கள் மக்களுக்கு சேவை செய்து வரும் காட்சி கண்டிப்பாக எந்த ஊடகங்களிலும் வருவதில்லை. 

கொட்டும் மழையிலும் வீடு வீடாக சென்று ஏழைகளுக்கு உணவளிக்கும் தமிழக பாஜகவின் இளைஞரணி தலைவர் …

விளம்பரங்கள் பற்றி சிந்தனையின்றி, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே‘ என்ற நோக்கத்துடன் ஆயிரக்கணக்கான சுயம் சேவகர்களும் பாஜக தொண்டர்களும் சேவை செய்து வருகின்றனர்.  

இந்த வகையில் தமிழக பாஜகவின் இளைஞரணித் தலைவர் வினோஜ் செல்வம் இன்று சென்னை துறைமுகம் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு, வீடு வீடாகச் சென்று உணவளித்து வரும் காட்சி, வருங்காலம் இளைஞர்களின் கையில் பாதுகாப்பாக உள்ளது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.-

வலதுசாரி சிந்தனையாளர் பத்மநாபன் நாகராஜன்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version