கும்பாபிஷேகம் நடத்தி வெறும் 22 நாட்கள் தான் ஆன சிறுவாச்சூர் கோவில் சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இக்கோவிலை சிறுவாச்சூர் அப்பகுதி கிராம மக்கள் ஒரு மாதத்திற்கு முன்பு தான் ₹10 லட்சம் செலவு செய்து புதுப்பித்து கும்பாபிஷேகமும் நடத்தியுள்ளனர்.
சிறுவாச்சூர் கோவில் சேதப்படுத்தபட்டதை தொடர்ந்து பா.ஜ.க நிர்வாகிகள், இந்து ஆதரவாளர்கள் சிறுவாச்சூர் சென்று கோவிலை பார்த்து அங்குள்ள கிராம மக்களுக்கு சமாதானம் செய்தார்கள். பின் அக்கோவிலை புதுப்பிக்க முடிவெடுத்த கொடுப்பதற்காக ஜான் ரவி மற்றும் கார்த்திக் கோபிநாத் ஆகியோர் நடத்திய Milaap Crowd Fund நிதி திரட்டலில் ₹10 லட்சம் கேட்கப்பட்டு இருந்தது.
ஆனால், உலகம் முழுவதும் இருந்து ஹிந்துக்கள் வெறும் 7 மணி நேரத்தில் ₹12 லட்சத்திற்கு மேல் தற்போது பங்களிப்பு அளித்துள்ளனர். சிறுவாச்சூர் கோவில் புதுப்பித்தல் போக மீத பணத்தை சிறுவாச்சூர் கோவிலுக்கு அருகில் இருக்கும் சிறு தெய்வ கோவில்களை புனரமைக்க பயன்படுத்த இருப்பதாக நண்பர் ஜான் ரவி அவரின் குழுவினர்தெரிவித்துள்ளார்கள்.
7 மணி நேரத்தில் ஹிந்து தர்மத்திற்காக நிதி பங்களிப்பு அளித்த ஹிந்துக்ககளின் ஒற்றுமையை பறைசாற்றியுள்ளது. மேலும் இந்த நிதி பெறுவதற்கு பா.ஜ.க செய்தி தொடர்பாளர் திரு. எஸ்.ஜி சூர்யா மற்றும் அஸ்வத்தமன், மாரிதாஸ் ஆகியோர் முக்கிய பங்காற்றி உள்ளார்கள்