கர்நாடகா மங்களூருவில் செயின்ட் ஜெரோசா பள்ளி 60 ஆண்டுகாலமாக இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு ராமாயணமும், மகாபாரதமும் கற்பனைக் கதை 2002 கோத்ரா கலவரம் மற்றும் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை பற்றி மாணவர்கள் மனதில் தவறான தகவல்களை கூறி பாடமாக எடுத்துள்ளார்.
மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் இதை பற்றி கூறியுள்ளார்கள். இந்த சம்பவம் காட்டு தீ போல் பரவியது. இதை அறிந்த பா.ஜ.க MLA உட்பட வலதுசாரிகள் போராட்டத்தில் இறங்கினார்கள். இதை தொடர்ந்து விஷயம் பூதாகரமானது.
பா.ஜ.க எம்.எல்.ஏ வேத்யாஸ் காமத், வலதுசாரிகள் அமைப்பு மங்களூருவிலுள்ள செயின்ட் ஜெரோசா ஆங்கில ஹெச்.ஆர் தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர், ராமாயணம், மகாபாரதத்தை கற்பனைக் கதை என்றும், 2002 கோத்ரா கலவரம் மற்றும் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை பற்றி ஏழாம் வகுப்பு மாணவர்களிடம் தவறான தகவல்களை மாண்வர்களிடம் புகுத்தி வருகிறார் என புகார் அளித்தனர்.
இந்த நிலையில் , குழந்தைகளின் மனதில் ஆசிரியர் வெறுப்புணர்வுகளைத் தூண்ட முயற்சிக்கிறார் என்று ஆசிரியருக்கெதிராக அவர்கள் புகாரும் கூறினர். மேலும், இந்த விவகாரத்தில், ராமர் ஒரு புராண கதாபாத்திரம் என்று மாணவர்களிடம் ஆசிரியர் கற்பித்ததாக பெற்றோர்களும் தெரிவித்திருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியரை நீக்கம் செய்யுமாறு வேத்யாஸ் காமத் ஆதரவாளர்கள் கடந்த சனிக்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், இந்த போராட்டத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ வேத்யாஸ் காமத்தும் கலந்துகொண்டார். அதோடு, “இப்படிப்பட்ட ஆசிரியரைத்தான் நீங்கள் ஆதரிக்கப் போகிறீர்களா… அந்த ஆசிரியரை ஏன் இன்னும் வைத்திருக்கிறீர்கள். நீங்கள் வணங்கும் இயேசு அமைதியை விரும்புகிறார். உங்கள் சகோதரிகள் எங்கள் இந்துக் குழந்தைகளிடம் பொட்டு வைக்க வேண்டாம், பூ வைக்க வேண்டாம், கொலுசு போட வேண்டாம் என்று கூறுகிறார்கள். ராமருக்குப் பாலாபிஷேகம் செய்வது வீண் என்று கூறியிருக்கிறார்கள். இதுவே உங்கள் நம்பிக்கையை யாராவது அவமதித்தால், நீங்கள் அமைதியாக இருக்க மாட்டீர்கள்” என பள்ளி நிர்வாகத்திடம் பா.ஜ.க எம்.எல்.ஏ வேத்யாஸ் காமத் கேள்விகளால் துளைத்துள்ளார்.
இன்னொருபக்கம், பொதுக்கல்வித்துறை இணை இயக்குநர் (டிடிபிஐ) இந்த விவகாரத்தில் விசாரணையும் நடத்தி வந்தார். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியரைப் பள்ளி நிர்வாகம் நேற்று பணிநீக்கம் செய்திருக்கிறது. மேலும், பள்ளி நிர்வாகம் ஒரு கடிதத்தில், “செயின்ட் ஜெரோசா பள்ளிக்கு 60 வருட வரலாறு இருக்கிறது. இன்றுவரை இதுபோன்ற சம்பவம் எதுவும் நடந்ததில்லை.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் எங்களிடையே தற்காலிக அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, உங்கள் ஒத்துழைப்புடன் இந்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப எங்கள் நடவடிக்கை உதவும். எங்கள் மாணவர்களின் சிறந்த எதிர்காலத்துக்காகவே நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்” என்று தெரிவித்திருக்கிறது.