காஷ்மீர் ஸ்ரீநகரில் முன்பு தீவிரவாதிகளால் இடிக்கப்பட்ட ராமர் கோவில் மீண்டும் கட்டப்படுகிறது!
1990ஆம்_ஆண்டு அது ஒரு வெள்ளிக்கிழமை திடீரென்று. காஷ்மீரில் ஒலிபெருக்கிகளில் இருந்து ஒரே செய்தி வெளியிடப்பட்டது. “இந்துக்கள் அனைவரும் இன்று இரவுக்குள் காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்”.இந்துக்களுக்கு மூன்று வாய்ப்புகள் தரப்பட்டன.உங்கள் மதத்தை விட்டு விடுங்கள் அல்லது காஷ்மீரை விட்டு வெளியேறிவிடுங்கள் அல்லது உயிரை விட்டு விடுங்கள்” இதுதான் அந்த செய்தி. பல ஆயிரம் இந்துக்கள் உயிர் இழந்தனர்; பல லட்சம் இந்துக்கள் தங்கள் உடைமைகளை இழந்தனர். என செய்திக கூறியுள்ளது.
அதே1990 ஆம் ஆண்டு ஸ்ரீநகரில் உள்ள ராமர்கோவில் வளாகத்தில் இருந்த தர்மசாலை தீவிரவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு இந்தக்கோவில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் குண்டுவீசி சேதப்படுத்தப்பட்டது. 20 ஹிந்துக்கள் உயிரிழந்தனர், 40க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
ஸ்ரீநகரில் உள்ள ராமர் கோவில், காஷ்மீர் மன்னன் மகாராஜா குலாப்சிங் அவர்களால் 1835ஆம் ஆண்டு கட்டப்பட்டது இந்தக் கோவிலின் #கர்ப்பக்கிரகத்தின் மூன்று பக்கத்தின் சுவர்களிலும் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டன.இதுபோல பல நூறு கோவில்கள் காஷ்மீரில் இடிக்கப்பட்டன.
2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட விசேஷ அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. அங்கு மீண்டும் அமைதி நிலவத் தொடங்கியது.ஸ்ரீநகரில் உள்ள ராமர் கோவிலின் புனர்நிர்மாணம் துவங்கியது. காஷ்மீர் டூரிஸம் இந்தப் பணியை மேற்கொண்டது. ஜீலம் நதியில் உள்ள பல படித்துறைகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டன.
காங்கிரஸ் ஆட்சியில் இதெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயங்கள். “அசாத்தியமான செயல்களை செய்து முடிக்கும் தலைவனுக்கு நரேந்திரமோடி என்று பெயர்” என்கிறார் அரசியல் விமர்சகர் அண்ணாமலை. காஷ்மீரிலிருந்து விரட்டப்பட்ட பல லட்சம் காஷ்மீரி இந்துக்கள் மறுபடியும் அங்கு குடியேறும் நாள் வெகு தொலைவில் இல்லை
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















