தமிழக ஊடகம் நடத்திய விவாத மேடையில் கண்முண்ணே வைத்து ஜெகத் கஸ்பாரின் போலி முகத்திரையினை கிழித்து தொங்கவிட்டார் ஆன்மிக மண் பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீனிவாசன் அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இராம. ஸ்ரீனிவாசன் அவர்களின் உரை கூர்மையான வாள் கொண்டு எதிரிகளின் தோலை உரிப்பது போல் ஜெகத் கஸ்பாரின் போலி முகத்திரையினை கிழித்துள்ளார். என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
தமிழ் ஊடகம் நடத்திய மேடை விவாதம் ஒன்றில் தமிழகம் பெரியார் மண்ணா? ஆன்மீக மண்ணா? என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பாதிரியார் ஜெகத்கஸ்பர், திராவிட கட்சியின் அருள்மொழி ஆகியோர் பெரியார்மண் தலைப்பில் கலந்து கொண்டு பேசினார்கள்.
பாதிரியார் ஜெகத்கஸ்பர், பேசுகையில் இந்து மதம் குறித்து தவறாக விமர்சனம் செய்து பேசினார், அதற்கடுத்து ஆன்மிக மண் என்ற தலைப்பில் பேசிய பாஜக பொதுச்செயலாளர் இராம. ஸ்ரீனிவாசன் அவர்களின் உரை கூர்மையான வாள் வீச்சு போன்று அமைந்தது, அதிரடியாகவும் நிதானமாகவும் உண்மைகளை எடுத்துரைத்து பேசினார். அவர் பேசுகையில் பாதிரியார் ஜெகத்கஸ்பர் முகம் வாடி வதங்கி விட்டது.
இராம.ஸ்ரீனிவாசன் பேசுகையில் : இந்து மதத்தைப் பற்றி பாதிரியார் ஜெகத்கஸ்பர் பேசக்கூடாது நீங்கள் கிறிஸ்துவர் நீங்கள் கிறிஸ்துவத்தில் உள்ள தீண்டாமை பற்றிப் பேசுங்கள் எத்தனை உதாரணங்கள் சொல்ல முடியும் தலித் கிறிஸ்தவர்களுக்கு ஈடுகாட்டில் இடமில்லை என்பது திருச்சியில் இருக்கிறதா? இல்லையா பாதிரியார் ஜெகத்கஸ்பர் இங்கு வந்து வைதீகம் பேசுகிறார் இங்கு சனாதனம் பேசுகிறார் சீர்திருத்தம் செய்கிற உரிமை பற்றி பேசுகிறார் ஆனால் அதை உங்கள் கிறிஸ்துவத்தில் இருந்து ஆரம்பியுங்கள். எங்களிடம் வேண்டாம் என அதிரடியாக பேசினார். மேலும் மசூதிகளில் இங்கு பெண்கள் வழிபட அனுமதி வழங்குவார் என அருள்மொழி கேட்பாரா என அருள்மொழியையும் ஒரு கை பார்த்துவிட்டார்.
எப்போதும் போல் நெறியாளர் தம்பி தமிழரசன் இராம.ஸ்ரீனிவாசன் பேசுகையில் இடை இடையில் இடையில் வந்தார். வெளுத்து வாங்கிவிட்டார் இராம ஸ்ரீனிவாசன், மேலும் தலைப்பு ஆன்மீக மண்ணா? மதம் குறித்து பேசாமல் வேறு எவ்வாறு பேசமுடியும் தம்பி தமிழரசன் அவர்களே என தரமாக பேசினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.














