முதல்வர ஸ்டாலின் 75 ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி சென்னை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றினார். பின்னர் தனது முதல் சுதந்திர தின உரையாற்றினார். ஸ்டாலினின் சுதந்திர தின உரை தற்போது சர்ச்சையினை கிளப்பியுள்ளது.
ஸ்டாலினின் பேச்சு சமூக வலைத்தளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலினின் சுதந்திர தின உரையாற்றும்போது சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பெயரை குறிப்பிடவில்லை ஆனால் சுதந்திரத்திற்கு போராடாத ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்று கூறிய பெரியாரை சுதந்திரம் போராட்ட வீரர் என்று குறிப்பிட்டுள்ளார் மு க ஸ்டாலின்.
சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை. இதனால் தியாகிகள் மற்றும் குடும்பத்தினர் வேதனையில் உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் தன் பேச்சில் சுதந்திர போராட்ட வீரர்களை வரிசைப்படுத்தியபோது வீரன் அழகுமுத்துக்கோன் பெயரை குறிப்பிடவில்லை.
அதே நேரம் ‘சுதந்திரம் வேண்டாம்’ என்ற ஈ.வெ.ரா.வை சுதந்திர போராட்ட வீரர் எனக் குறிப்பிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இப்பட்டியலில் இருந்து அப்பெயரை நீக்க வேண்டும். உண்மையான சுதந்திர போராட்ட வீரர்கள் வரலாறு பாடப் புத்தகங்களில் இடம் பெற வேண்டும். என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது.
பாஜக மூத்த தலைவர் ராஜா போன்றோர் அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் அவர்களின் கண்டன பதிவுகளை பதிவு செய்துள்ளார்,
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















