மாற்று மதப்பெண்களை காதல் வயப்படுத்தி, மதம் மாற்றி திருமணம் செய்து கொள்ளும், ‘லவ் ஜிஹாத்’ சதிவலை, ‘டெலிகிராம், டிண்டர்’ உள்ளிட்ட சமூகவலைதளங்கள் வாயிலாக அதிகரித்து வருகிறது. இந்த, ‘டிஜிட்டல் லவ் ஜிஹாத்’தை கட்டுப்படுத்துவதற்காக, சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணிக்கும் பணியில் மத்திய புலனாய்வு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.திருமணம் என்ற பெயரில் ஹிந்து பெண்களை, முஸ்லிம் இளைஞர்கள் கட்டாய மதமாற்றம் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டு, கடந்த சில ஆண்டுகளாக அதிகரிக்க துவங்கியுள்ளது.அவ்வாறு கட்டாய மத மாற்றங்கள் செய்யப்படுவது, ‘லவ் ஜிஹாத்’ என அழைக்கப்படுகிறது.இதை தடுக்க உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற பா.ஜ., ஆளும் மாநிலங்களில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
உளவுத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள், இது போன்ற சமூக வலைதள அமைப்புகளை பயன்படுத்தி, ஹிந்து பெண்களை குறிவைத்து மதமாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது உறுதியாகியுள்ளது.
மொத்தம், 2,500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட, ‘ஜய்துன் கவுன்சில்’ என்ற ரகசிய, ‘டெலிகிராம்’ குழு, கேரளாவிற்கும், மேற்கு வங்கத்திற்கும் இடையிலான எல்லை தாண்டிய நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதும் அம்பலமாகியுள்ளது.
இந்தக் குழு, மதமாற்றத்துக்கான ஆட்சேர்ப்பு இலக்குகள், சித்தாந்த உள்ளடக்கம், நிதி ஆதாரங்களை ஒருங்கிணைத்தது தெரியவந்துள்ளது.புதிதாக மதம் மாறிய பெண்களுக்கு, இதற்கென பிரத்யேகமாக அடையாள அட்டை வழங்கப்பட்டு, டிஜிட்டல் தளத்தில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
2018 – 24 இடையிலான காலக்கட்டத்தில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள், மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடந்தது. அந்த மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலீஸ் நிலையத்தில் புகார் இது குறித்து நேற்று புகாரளித்திருந்தார். அதாவது கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் காதலித்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு தனது மனைவி தன்னை மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
விஷால் குமார் கோகாவி என்ற அந்த நபர் இது தொடர்பாக போலீஸிலும் புகார் அளித்துள்ளார். அதில் தஹ்சீன் ஹோசாமனி என்ற பெண்ணை மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகவும், நவம்பர் 2024ல் இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், பதிவு திருமணத்திற்குப் பிறகு, ஹோசாமனி தன்னை முஸ்லிம் முறைப்படி மீண்டும் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியதாக கோகாவி குற்றம் சாட்டுகிறார்.
மதமாற்றம்?
திருமண உறவில் பிரச்சினை வரக்கூடாது என்று விரும்பி, கடந்த ஏப்ரல் 25ம் தேதி முஸ்லிம் முறைப்படியும் ஹோசாமனியை திருமணம் செய்து கொண்டதாக விஷால் குமார் கூறியிருக்கிறார். இருப்பினும், அப்போது தனக்குத் தெரியாமலேயே தனது பெயரை மாற்றிவிட்டதாகவும் முஸ்லிம் மதகுரு மூலம் தான் அறியாமலேயே மதமாற்றம் செய்யப்பட்டதாகவும் விஷால் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையே முஸ்லிம் முறைப்படி விஷால் குமார், ஹோசாமனியை திருமணம் செய்யும் வீடியோ ஒன்று இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.மறுப்பும் மிரட்டலும்!
முஸ்லீம் முறைப்படி திருமணம் நடந்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் இந்து முறைப்படியும் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்து முறைப்படு கல்யாணம் செய்து கொள்ள ஹோசாமனி முதலில் ஒப்புக்கொண்டு இருக்கிறார். ஆனால், பின்னர் அவரது குடும்பத்தினரின் அழுத்தம் காரணமாக இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடியாது என ஹோசாமனி மறுத்துவிட்டதாகவும் விஷால் குமார் கூறியுள்ளார்.
மேலும், தான் மதம் மாறவில்லை என்றால் தன் மீது பாலியல் வன்கொடுமை வழக்குத் தொடரப்போவதாக ஹோசாமனி மிரட்டியதாகவும் விஷால் குமார் தனது புகாரில் கூறியுள்ளார். ஹோசாமனியும் அவரது தாயார் பேகம் பானுவும் தன்னை மதமாற்றம் செய்யும் முயற்சியாக ஜமாத்தில் கலந்து கொள்ளச் செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவு 299 மற்றும் பிரிவு 302 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
