நேற்றைய தினம் தமிழக பா.ஜ.கவின் மாநில தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார் முன்னாள் ஐ பி எஸ் அதிகாரி அண்ணாமலை அவர்கள். அவரின் பதவி ஏற்பு விழா கோலாகலமாக பாஜகவால் கொண்டாடப்பட்டது. பா.ஜ.க தலைமை அலுவலகம் திருவிழா கோலம் பூண்டது. ஆயிரக்கணகக்கான பாஜகவினர் சென்னையை நோக்கி படையெடுத்தார்கள். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன்,ஹெச். ராஜா,சிபி ராதாகிருஷ்ணன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் மாநில நிர்வாகிகள் அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.இந்த நிலையில் பாஜக இளைஞரணி ஒரு ட்வீட் பதிந்துள்ளது அதில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கும் உள்ள ஒப்பீடு ஆகும். அந்த பதிவில் ரியல் ஹீரோ சிங்கம் அண்ணாமலை – ரீல் ஹீரோ உதயநிதி என பங்கம் செய்துள்ளது.
கீழ் உள்ளவாறு ஒப்பிடுகளை தந்துள்ளது பாஜக இளைஞரணி
1.பெயர் – அண்ணாமலை ஐ.பி.எஸ் வயது – 37 விவசாய குடும்பம் பட்ட படிப்பு – மெக்கானிக்கல் என்ஜினீயர் –
மேற்படிப்பு – எம்பிஏ, ஐஐஎம், லக்னோ சாதனை – 24 வயதில் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி, 10 ஆண்டுகள் மாவட்ட எஸ்.பி, பெங்களூரு மாநகர காவல்துறை துணை கமிஷனர்
பெயர்- உதயநிதி ஸ்டாலின் வயது – 43 கருணாநிதி குடும்பம் பட்டப்படிப்பு பி.எஸ்.சி நயன்தாரா, ஹன்சிஹா, தமனா, எமி ஜாக்சன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட ஏராளமான நடிகைகளுடன் நடித்தது.
2.அண்ணாமலை அவர்களுக்கு கட்சி பதவி – திறமையால், உழைப்பால் 37-வது வயதில், தமிழக பாஜக தலைவர்
உதயநிதி ஸ்டாலின் – 42 வயதில் திமுக இளைஞரணி செயலாளராக பட்டம் சூட்டப்பட்டவர்
3.அண்ணாமலை அவர்களின் தனிச்சிறப்பு – உழைப்பால் உயர்ந்தவர், நேர்மையானவர், ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்
உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தனிச்சிறப்பு- காருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன், திமுகவின் இளவரசர்
4.மக்கள் மனதில்அண்ணாமலை அவர்கள் – சிங்கம் அண்ணாமலை
உதயநிதி அவர்கள் – 3-ஆம் கலைஞர்
5.அண்ணாமலை அவர்கள் விவசாயிகளின் வழிகாட்டி
உதயநிதி அவர்கள் கார்பரேட்களின் ஒளிவிளக்கு
6.அண்ணமாலை அவர்களின் நோக்கம் – பொது நலன், மக்கள் நலன், நல்லாட்சி –
உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நோக்கம் சுய நலம், குடும்ப நலன், அடுத்த முதல்வர்
7.அண்ணாமலை அவர்களின் கொள்கை – கட்சியே குடும்பம்
உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கொள்கை குடும்பமே கட்சி
8.அண்ணாமலை அவர்கள் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் –
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கொத்தடிமைகளின் முதலாளி