இரிஷிவந்தியம் வேட்பாளர் அறிமுக விழாவில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பங்கேற்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் SKTC A.சந்தோஷ் அவர்களின் அறிமுக விழா இன்று பகண்டை கூட்டு சாலையில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், மாவட்ட செயலாளர் குமரகுரு, வழிகாட்டுதல் குழு உறுப்பினர் பா.மோகன், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இறுதியாக பேசிய சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கூட்டணி கட்சி மற்றும் அனைத்து நிர்வாகிகளிடமும் ஒன்றுபட்டு செயல்பட்டு அதிமுக வேட்பாளர் SKTC A.சந்தோஷ் அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
.இரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து அஇஅதிமுக,பாஜக,பாமக,தமாகா,புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Exit mobile version