டிக் டாக் இந்தியாவில் தடை செய்தலும் டிக் டாக் நாயக நாயகர்களின் அலப்பறைகளும் ஆபாச பேச்சுக்களும் குறைந்தபாடில்லை. தற்போது இன்ஸ்டா ரீல் முகநூல் சார்ட் வீடியோ ரோபோச என பல சமூக வலைதள பக்கங்களில் அலப்பறை செய்து வருகிறார்கள் ரவுடி பேபி சூர்யா, ஜி.பி முத்து போன்ற டிக்டாக் பிரபலங்கள் அவர்கள் ஒருகாலத்தில் டிக் டாக்-ல் ஆரம்பித்த ஆபாச சண்டை தற்போது முதல்வரிடம் பஞ்சாயத்து சென்றுள்ளது. அவர்களின் ஆபாச பேச்சு வீடியோக்கள் அவ்வபோது வைரலாகி வருகின்றன. இதையொட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த வீடியோகளில் அவர்களுக்கிடையே உள்ள சண்டையை ஆபாச பேச்சுக்கள் மூலம் யூடியூப் (Youtube) பக்கங்களில் வெளியீட் டு ஊரறிய செய்து வருகின்றனர். இதை பலர் ரசித்தும், கண்டித்தும் வந்தனர். ஏற்கனவே ஆபாச பேச்சு வழக்கில் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரைப் போலவே இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுக்கிறது.
மாணவர்கள் பெண்கள் அதிகமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் இந்த வேளையில் இது போன்ற ஆபாசமக பேசுவதுன் இளம் தலைமுறையினரை தவறான வழிக்கு சென்றுவிடும். எனவே ஆபாச பேச்சுக்கள் பேசும் சமூகவலைத்தள நாயகர்கள் நாயகிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளியின் தாளாளர் கொடுத்த பபுகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இணையதளத்தில் ஆபாசமாக பேசி வரும் ஜி.பி முத்து, ரவுடி பேபி சூர்யா, திவ்யா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுத்து அவர்களின் சமூக வலைத்தளங்களை முடக்க வேண்டும் என மக்கள் அதிகார இயக்கம் முதல்வர் மு.க ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆன்லைன்ல வகுப்புகளுக்காக இணையத்தை பயன்படுத்தும் போது இதுபோன்ற வீடியோக்களை மாணவர்கள் பார்க்க நேரிடும் என்றும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.