தமிழகத்தில் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து ஆளுநர் வரை புகார் பறந்தது. இதனை தொடர்ந்து ரவுடிகளை கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது தமிழக காவல்துறை.
மேலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சி.டி.மணியை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், சி.டி.மணியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் போரூர் பாலம் அருகே வளசரவாக்கம் போலீசார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பிரபல ரவுடி சி.டி.மணியை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்த சென்னை காவல் ஆணையரின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. இச்சம்பவம் மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சி.டி.மணியைகாவல் துறையினர் மிகதீவிரமாக தேடிவந்தநிலையில், சி.டி.மணியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் போரூர் பாலம் அருகே வளசரவாக்கம் காவல்துறை ரவுடி மணியை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து மணி மீது, குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டது.
இதனை தொடர்ந்து தனது மகன்மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை ரத்துசெய்யக் கோரி, சி.டி.மணியின் தந்தை பார்த்தசாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், வீட்டில் இருந்த தனது மகனை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்து அழைத்துச் சென்றதாகவும், ஆனால் போரூர் பாலம் பகுதியில் தப்பியோட முயன்றபோது கைது செய்ததுபோல வழக்கை ஜோடித்துள்ளதாகவும், தனது மகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்குரைஞர் பல குற்ற வழக்குகளில் மனுதாரரின் மகன் ஈடுபட்டதால்தான் கைது செய்யப்பட்டார். குற்ற வழக்குகளின் தீவிரத்தைப் பொறுத்தே சி.டி.மணி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஆவணங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயா்த்து வழங்கியதாகவும் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் பிறப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து முறையாக வழங்கவில்லை. சில பக்கங்கள் கைதுக்கான தெளிவான காரணமில்லை என்று கூறி சி.டி.மணியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.