இயக்குனர் அமீர் இயக்கிவரும் படம் தான் இறைவன் மிகப்பெரியவன் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதீக் இவர் திமுகவின் முன்னாள் நிர்வாகிகடந்த மூன்று ஆண்டுகளாக போதைப்பொருள் சாம்ராஜ்யத்தின் தலைவனாக செயல்பட்டவன். கயல் ஆனந்தியை வைத்து மங்கை, உள்ளிட்ட படங்களையும் தாயாரித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இயக்குனர் அமீருடன் பல காஃபேக்களை நடத்தி வருபவர்.
போதைப்பொருள் கடத்தலின் தலைவன் ஜாபர் சாதிக் தனது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து இந்த போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டார் மைதீன் இறைவன் மிகப் பெரியவன் என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருவதாகவும், சலீம் விசிகவின் நிர்வாகி என விசாரணையில் தெரியவந்தது. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு சினிமாவில் முதலீடு செய்து உள்ளதாக கூறப்படும் நிலையில் என்னென்ன படத்திற்கு பைனான்ஸ் செய்து உள்ளார்கள். இவர்களுக்கு சினிமாவில் உறுதுணையாக இருப்பது யார்? சொத்துக்களாக எங்கெங்க சேர்த்து வைத்திருக்கிறார்கள்? என தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும், டில்லியில் இருந்து மலேஷியா வழியாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு, 45 சரக்கு பெட்டிகளை அனுப்பி இருப்பது கண்டறியப்பட்டது. அனுப்பப்பட்ட போதை பொருளுக்கான மூலப் பொருட்களின் மதிப்பு, 2,000 கோடி ரூபாய் இருக்கும். இது வெளிநாட்டு ஏற்றுமதி கணக்கு தான்.
இந்தியாவிற்கு உள்ளேயும் இதை போதை பொருள் தயாரிக்கவும், விற்பனைக்கும் பயன்படுத்தி இருப்பர். அதையும் சேர்த்தால், 15,000 கோடி ரூபாய் அளவுக்கு பணம் புரண்டிருக்கும். போதை பொருள் கடத்தல் வாயிலாக சம்பாதித்த பணத்தை வைத்து, ஜாபர் சாதிக் திரைப்படங்கள் தயாரித்துள்ளார். அவருக்கு, பல்துறை வி.ஐ.பி.,க்களிடமும் நல்ல அறிமுகமும், நெருக்கமும் இருந்துள்ளது.
கடந்த 2021ல் கொரோனா உச்சத்தில் இருந்த கால கட்டங்களில், ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள் சலீம், மைதீன் ஆகியோர், ‘ஜே.எஸ்.எம்.ஸீ புட்ஸ், ஜூகோ ஓவர்சீஸ், ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ்’ என்ற பெயர்களில், மூன்று நிறுவனங்களை துவக்கியுள்ளனர். அதற்கு முன் 2015ல், ‘ஜே.எஸ்.எம்.டி.பென்சிக் அபைர்ஸ்’ என்ற பெயரில் ஒரு நிறுவனம் நடத்தி வந்துள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல் வாயிலாக சம்பாதித்த பணத்தில், அந்த நிறுவனங்கள் துவங்கப்பட்டதாக, போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபருடன் சினிமாவைச் சேர்ந்த மற்ற நபர்கள் யார் யாரெல்லாம் தொடர்பு இருக்கிறது. இங்குள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல் தொடர்பு என்னென்ன என்பது குறித்தும் சைபர் கிரைம் தொழில்நுட்ப நிபுணர்கள் உதவியுடன் செல்போன் அழைப்புகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் இயக்குநர் அமீரை விசாரிக்க மத்திய மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துளார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து இயக்குனர் அமீர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் மது, விபச்சாரம், வட்டி இது போன்ற விஷயங்களுக்கு எதிரான மார்க்கத்தை பின்பற்றுபவன் நான் என்று தெரிவித்துள்ள அமீர், இது போன்ற குற்றச்செயலில் தொடர்பு படுத்தி பேசுவது அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என்றும் குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்
ஜாபரின் போதை பொருள் விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு போலீசார் அழைத்தால் செல்ல தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் ஏற்கனவே ஜாபர் சாதிக்கை, தனது உறவினர் என்றும், காபி கடை பார்ட்னர் என்றும் அமீரே தெரிவித்த வீடியோக்களின் அடிப்படையில் போதை தடுப்பு போலீசார் அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் தான் விசாரணைக்கு தயாராக இருப்பதாக தன்மீது பேரன்பு கொண்டவர்கள் மூலமாக போதை தடுப்பு போலீசாரை விசாரணைக்கு அழைத்துள்ளார் அமீர்.